பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 爱? நடை சில சில கட்டுரைகளில் காணப்படுகின்றது. ஆமூலும் பாரதியின் உரைநடை ஒரே தரத்ததாக அமைந்திருக்க வில்லை. பாரதியின் கட்டுரைத் தொகுதிகள் அனைத்தையும் பொறுமையோடு படிக்கிறவர்கள் அவரது வசன நடையின் குறைபாடுகளையும் எளிதில் உணர முடியும், பாரதியின் கட்டுரைகள் எல்லாமே இலக்கியத் தரமான கட்டுரைகள் அல்ல. ஒவ்வொன்றும் முழு வடிவம் பெற்ற கட்டுரையாகவும் அமையவில்லே. கட்டுரைகள் என்று குறிப்பிடப் பெற்றுள்ளவற்றில் பலவும் சிந்தணேச் சிதறல் களாகவும், எண்ணக் கோவைகனாகவும், ஆபிப்பிராய உதறல்களாகவும், கருத்து உதிரிகளாகவும்தான் காணப் படுகின்றன, "தமிழில் உரைநடை பற்றிப் பேச வந்த ரா. பூநீ. தேசிகன், 'பாரதியின் கவிதையில் ஒரு தனித்த சொல் லாட்சியை நாம் உணர்ந்தாலும், அவருக்கு உரைநடையில் அதிகப் பயிற்சி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய வசன நூல்கள் இவ்வுண்மையை நமக்குப் புலப்படுத்துகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளது நினைவுகூரத் தகுந்தது. ஆளுல், பாரதியார் அழகு, அலங்காரம், நடை நேர்த் திக்காகத் தனது எண்ணங்களே எழுதவில்லை. மக்களின் மடமை, மூடபக்தி, குறைகள் முதலியவற்றைச் சுட்டிக் காட்டவும், நாட்டின் தாழ்ந்த நிலையை எடுத்துச் சொல்லிக் குறைகளை நீக்கவும், ஹிந்து மத உயர்வினையும் உண்கைத் தன்மைகளையும் உணர்த்தவும், இவ்வாறு பயன்படக் கூடிய நோக்கங்களுக்காகவே எழுதினர். எதிரே இருப்பவர்களைப் பார்த்து வார்த்தையாடுவது போல, நேராக எளிய தடையில் தெளிவாக அனைத்தையும் கூறிஞர். -