34
பாரதிதாசன்
தேசிய விடுகவிகள், தேசியத் தாலாட்டுகள், தேசிய விளையாட்டுப் பாடல்கள், சிட்டுக்குருவிப் பாட்டு, நிலாப்பாட்டு, நாய்ப்பாட்டு, தேசியக் கப்பல், தேசியக் கல்யாணப் பாடல்கள் என்பவை அத்தொகுப்பில் அடங்கும்.
விடுகவி வடிவில் சிறுவர் படித்து மகிழும் வண்ணம் பாரதிதாசன் எழுதிய கவிதைகள் புதிர்த் தன்மையோடு அமைந்துள்ளன.
கங்கைநதி தலையிலுண்டு சிவனார் அல்ல
காலடியில் குமரியுண்டு ராமன் அல்ல
சங்கையற்ற வயதுண்டு கிழவி யல்ல
சாத்திரத்தின் ஊற்றனையாள் கலைமாதல்ல
எங்குலத்தைப் பெற்றதுண்டு பிரமன் அல்ல
ஏற்றுண்ணும் எண்ணமில்லை இறுமாப் பல்ல மங்கையென்று பாடிடுவார் புலவ ரெல்லாம்
மற்றிதனை இன்னதென எழுதுவீரே!
இவ்விடுகவிக்கு விடை 'பாரதநாடு', அதன் பெருமைகள் இவ்வெண்சீர் விருத்தத்தில் வரிசைப் படுத்துப் படுகின்றன.
அதிக உயரத்தில் ஆகாய
வாணி
அவளுர்க்கும் நம்மூர்க்கும் வைத்ததோர்
ஏணி
மதிப்புக் கடங்குமோ அவ்வேணி
உயரம்
மனிதர்சிலர் ஏறப்பார்த் தடைந்தனர்
துயரம்
குதித்துக் குதிக்திறங் கிடுவர் சில
பெண்கள்
குளிரில் இறங்குகையில் பாடிடுவர்
பண்கள்
இதற்கு விடைசொல்லக் கூடுமா?
என்னால்
ஏற்ற பரிசளிக்க லாகும் இது
சொன்னால்
இதன் விடை விண்ணை இடிக்கும் இமயமலை.
சுதந்திரமாக வானில் வட்டமிட்டுத் திரியும் சிட்டுக் குருவியைப் பார்த்து, இந்திய மக்களும் அதைப்போல் சுதந்திரமாய் வாழ வழி கேட்கிறார்.