பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆ பாரதிதாசன் உவமை நயம் அவன் நினைவாகவே இருக்கிறாள். விரக வேதனை அவளைச் சுடுகிறது. காய்ச்சிய இரும்பாயிற்றுக் காதலால் தேகம்’ என்பது கவிஞர் காதலியின் நிலைக்குக் கூறுகிற உவமை. அவளுக்கு உறக்கம் கொள்ளவில்லை. துயருகிறாள். அந்த நிலைமையை உவமைகள் அழகாகச் சித்திரிக்கின்றன. கள்ளியும் பாளை போல் கண்ணிர் விட்டுக் கடல் நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில் துள்ளிஉடல் துவள் தலின்றி. கிடக்கிறாள். அவள் உயிர் பிரிந்துவிடுவது உறுதி யாம். உண்மை அது. ஏன்? பூ பழசானால் உதிர்கிறது. செடியில் அமர்ந்த சிட்டு எழுந்தோடி விடுகிறது. சுளியும் அப்படியே அன்பனை அகன்ற அவள் உயிருக் கும் அதே கதிதானாம். இதோ கவிதை செழுங்கிளையில் பழம் பூப்போல் புதரில் குத்தும் சிட்டுப்போல் தென்னையிலே ஊசலாடி எழுத்தோடும் கிள்ளை போல் எனது டம்பில் இனிய உயிர் ஒரு கணத்தில் பிரிதல் உண்மை’ இது காதலியின் கூற்று. தனியாய் நின்று தவிக்கும் காதலன் என்ன நினைக்கிறான்? அதற்கும் அழகிய உவமை