பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இ. பாரதிதாசன் உவமை நயம் யிருள் அந்திப் பெண்ணாள் ஒளி போர்த்த துண்டோ, எழில் பூத்ததுண்டோ? என்று 'நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல் ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில்-சோலை உதிர் பூவென்ன மக்கள் துயில் கிடக்கும்போது என்ற உவமை அழகாக இருக்கிறது. இரவுப் பெண்ணாள் பின்னழகு காட்டி நிற்கிறாளாம். அழகின் காதலன் காணும் எழில் நிறை தோற்றம் எப்படியிருக்கிறது? இதோ: காட்சி... வெள்ளை முத்துக்கள் தைத்த போர்வையே மேனி போர்த்த - உடல் திருப்பிக் கண்மலர் திருப்பி நின்றாய்! பின்புறம் கரிய கூந்தற் கொண்டையில் ஒளியைக் கொட்டும் குளிர்நிலா வயிர வில்லை!" காணக்காணக் களிப்பூட்டும் காட்சிதானே?