பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - பாரதிதாசன்

க்டிவாளப் பிடிப்புக்கப்பால், கதைத்திடு மதமென் கின்ற நெடுங்குன்றுக் கப்பால், சாதி நிறைமுள்ளுக் காட்டுக் கப்பால் மடிவிலாக் கலை, சொல் பூக்கும் மணிப்புனல் ஒடை தன்னை உடையபுல்வெளியிலன்றோ உன் முழு துரிமை உண்டு! என்றுதாய்ப் பரி உரைத்தே எதிரில்தன் குட்டிதன்னை நன்றொரு முறையும் நோக்கி நளிர்புனல் ஒடைதன்னை, மின்னுடல் வெளியை நெஞ்சவெளியினி நோக்கி நோக்கித் தன்னுயிர் விட்டதங்கேதன்குட்டிக்குரிமை காட்டி!

கதைப் பாடல்கள் முற்றிற்று