பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 93

துப்பிலா அரசினர் சொல்வதே தீர்ப்பு.

நான்கூறுகின்றேன். நல்ல முத்துவின்

திருமணம் விரைவில் சிறப்படைக.

காட்சி - 10

திருமணம் என் விருப்பம் (இரிசப்பன் வீட்டில், வெள்ளையப்பன் பேசுகிறான்.)

வெள்ளையப்பன் :

அம்மாக் கண்தன் சொத்தெலாம் அளிப்பாள். உம்மகள் தன்னை அம்மாக் கண்ணின் மகனுக்கு கேதிருமணம்செய் விப்பீர் என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்!

இரிசப்பன் :

அம்மாக் கண்ணின் அடியை நத்தி வீணில் வாழும் வெள்ளையப்பரே, உமது சொல்லில் உயர்வேயில்லை. எமது கொள்கை இப்படியில்லை. நல்லமுத்துக்கே நம்பெண் உரியவள், பொல்லாப் பேச்சைப் புகல வேண்டாம்.

(அதே சமயத்தில் நல்லமுத்து வந்து இரிசனிடம் இயம்புகின்றான்.)

நல்லமுத்து :

உம்மகள் என்னை உயிரென்று மதித்தாள் திருமணம் எனக்கே செய்துவைத்திடுக!

(வெள்ளையப்பன் தன் மகனான நல்லமுத்தை நோக்கிக் கூறுகின்றான்.)