பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பாரதிதாசன்


உடையார் கனமணியோ(டு) ஒண்மாதுளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய்! அழேல் அழேல் தாலேலோ
உலகம் அளந்தானே! தாலேலோ.

இவ்வுளவு பெற்றும், அம்மாயக் குழவி தன் அழுகையை நிறுத்தவில்லை, மேலும் அழுகிறானாம். அவனுக்கு ஏதோ குறையாயிருக்கிறது. என்னதான் ஆடையயும் அணிகலனம் பிறர் கொண்டுவந்து தந்தபோதிலும், அவன் மனத்திலே திருப்தி பிறக்கவில்லை. அவனுக்கு உரியவளான திருமகள் அனுப்பிய பொருள் ஒன்றும் காணவில்லையே! திருமகளிடத்து அவனுக்குள்ள ஈடுபாட்டை நாம் நன்றாக அறிவோம். மார்பில்லவா அவளைத் திருமால் வைத்திருக்கிறான்! அவ்வளவு அருமை பொருந்திய திருமகளின் அன்புக்கு அடையாளமான பொருள் ஒன்றும் இன்னும் வரவில்லையென்றால், மாயன் பொறுப்பானா? இதனாலேதான் மீண்டும் அவன் அழுகின்றானாம்.

திருமகளும், தன் காதலன் பிரிவைப் பொறுப்பாளா? உடனே விரைந்து அன்போடு ஒரு கையுறை அனுப்புகிறாள், ஆழ்வார் தொட்டிலிற் கண் வளர்த்திய மாயக் கண்ணனுக்கு. அது என்ன பொருள்? இந்திரனும். குபேரனும் வருணனும் அனுப்பிய அணிகலன்கள் போல ஏதேனும் அணிகலனா? அன்று.

இறைவழிபாட்டுக்கு என்ன வேண்டும்? ஆடம்பரமான கோயிலும் விரிவான பூசை முறைகளும் மேளவாத்தியங்களும் இசைப் பாடல்களுமா? பால், நெய், தேன் முதலிய அபிடேகப் பொருள்கள், பழம் பலவகை