பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் - 59

யாழ்ப்பாணம் வ.நா.கணேச பண்டிதர் என்பவர் பாடிய மற்றொரு தாலாட்டு, திருக்குறள் அதிகார சாரமாகிய நன்னெறித் தாலாட்டு எனப் பெயர் பெறும். (அச்சானது 1919.) பல அதிகாரங்களுக்கு ஒவ்வொரு பாடல் வீதமும், சிலவற்றுக்கு இரண்டு அல்லது மூன்றும் இவர் பாடியிருக்கிறார். மொத்தம் கண்ணிகள் 120. உதாரணப் பாடல்களைக் கீழே காணலாம். -

எல்லாரிடத்தும் அன்பாய் ஏய்தலே இல்லறமாம் பொல்லாரை நீக்கிப் புகழ்பெறுவாய் கண்மணியே.

பொறுத்தலே நன்றாம் புகழ்வருமேற் பொல்லாரை ஒறுத்தலும் நன்றாம் அதனை உய்த்துணர்ந்து செய்கிளியே.

கொல்லான் புலாலையுண்ணாக் கோதில்தவத் தான்ைஉயிர் எல்லாம் தொழுதுநின்று எத்துமே கண்மணியே.

செல்வம் அறிவுகல்வி சீராற்றல் ஆண்மைகளால் வல்லபெரி யார்துணையை வாயறிந்து சொல் கிளியே.

துன்பத்துக் காரேதுணையாவார் நம்முடைய அன்புக்குரியநெஞ்சம் ஆகாக்கால் கண்மணியே.

இ. வாய்மொழி வழக்கு

சென்ற நூற்றாண்டின் இறுதியில் புலவர்பலர்,பெண்கள் உண்மையிலேயே குழந்தையைத் தொட்டிலிற்கிடத்தித் தாலாட்டுவதற்கென்று பலவகைப் பாடல்கள் செய்துள்ளார்கள். லாலி, கும்மி, ஊஞ்சல் முதலியனவாக