பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80
பாரதிதாசன்
 தாய் தாலாட்டு


ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ

சீரோடு பூத்திருந்து செந்தா
மரைமீது
நேரோடி மொய்த்துலவு நீலமணி
வண்டுதனைச்

செவ்விதழால் தான்மூடும் சேதிபோல
உன்விழியை
அவ் இமையால் மூடியே அன்புடையாய்
நீயுறங்கு

கன்னங் கறேலென்று காடுபட்ட
மேகத்தில்
மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல்
உன்றன்விழி

சின்ன இமையைத் திறந்ததேன்
நீயுறங்கு;
கன்னலின் சாறே! கனிச்சாறே
நீயுறங்கு!

குத்துண்ட கண்ணாடி கொண்டபல
விரல்கள் போல்
துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீ
சுருக்கி