பக்கம்:பாரதித் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

குறித்திருக்கிறேன். பாடல்கள் பலவற்றிற்கும் அவ்வாறே செய்திருக்கிறேன். அவற்றிலிருந்து பாரதியாருடைய இலக்கியத் திறமையின் மலர்ச்சியை ஒருவாறு அறியலாம்.

அன்பர் பரலி சு. நெல்லையப்பர் பார்தியாரோடு தொடர்புடையவர்கள். பாரதியாரைப் பற்றிய பல விஷயங்களை அவர் பல தடவை என்னிடம் கூறியிருக்கிறார். பாரதியார் தமக்கு எழுதிய இரண்டு கடிதங்களை அவர் எனக்குக் கொடுத்தார். அந்த இரண்டு கடிதங்களும் பாரதியார் எழுதிய நூல்களை வெளியிடுவது பற்றியவை. அவையல்லாமல் குற்றாலத்திற்குச் சென்ற சமயத்தில் அந்த அருவியை வருணித்து நெல்லையப்பருக்குப் பாரதியார் ஒரு கடிதம் எழுதியிருந்தாராம். அந்தக் கடிதத்தைப் படித்தால் குற்றால அருவியின் அழகிய காட்சியைக் காண்பதுபோலவே இருக்குமென்று நெல்லையப்பர் கூறினர். அதையும் எனக்குக் கொடுக்கத் தேடியபோது அது கிடைக்கவில்லை. அவருக்கும் ஏமாற்றம்; எனக்கும் ஏமாற்றமாக முடிந்தது.

முன்னுல் குறிப்பிட்ட கடிதங்கள் பதின்மூன்று ஆண்டுகள் என்வசமிருந்தன. பிறகு ஒருநாள் நெல்லையப்பரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த இரு கடிதங்களும் ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டியிருக்கின்றன என் அவர் எழுதினர். ‘பன்னிரண்டு ஆண்டுக்குமேல் உங்கள் வசம் இருக்கும் கடிதங்கள் உங்களுக்கேதான் சொந்தம். எனக்குக் கேட்க உரிமை கிடையாது. ஆனல் நீங்கள் விரும்பினல் கொடுத்துதவலாம்’ என்று அவர் கடிதத்தில் தெரிவித்திருந்தார். அவரிடத்திலே பெரிதும் மரியாதை கொண்டுள்ள எனக்கு அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமலிருக்க முடியுமா? கடிதங்களை அனுப்பிவைத்தேன். குழந்தை உள்ளம் படைத்த நெல்லையப்பர் அவற்றை யாரிடமோ கொடுத்து இழத்துவிட்டார். நாங்கள் சந்திக்கும்போது இன்றும் அதை நினைத்துத் துக்கப்படுவதுண்டு. ஆனல் நல்ல வேளையாக அவற்றில் ஒரு கடிதத்தை நான் அப்படியே பிளாக் செய்து பாரதியாருடைய கையெழுத்திலேயே ஒரு சமயம் கலைமகளில் வெளியிட்டிருந் தேன். அது இப்பொழுது கிடைத்தது. மற்றது மறைந்து போயிற்று.

இந்நூலே இதுவரை வெளியிடாததற்கு ஒரு முக்கியகாரணம் உண்டு. கீட்ஸ் என்ற கலைஞனைப்பற்றி ஆங்கிலத்திலே நான் ஒரு ஆராய்ச்சி நூல் படித்தேன். அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/12&oldid=1539702" இலிருந்து மீள்விக்கப்பட்டது