பக்கம்:பாரதித் தமிழ்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பாரதி தமிழ்

சாஸ்திரி என்பவர் ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிரு.ர். ஹிந்து-மகம்மதியருக் கிடையே பரஸ்பர மதிப்பும் அன்பும் அதிகப்படும் படி செய்வதற்கு அவர் சில வழிகள் குறிப்பிடுகிரு.ர்.

அவற்றுள் முக்கியமானவை பின் வருமாறு:

1. ஹிந்துக்களிலே சிலர் மஹம்மதிய வேத சாஸ்திரங்களைப் படித்து அவற்றிலே தேர்ச்சி பெற வேண்டும்.

2. அங்ஙனமே, மஹம்மதியர்களில் சிலர் ஸ்ம்ஸ் கிருதம் படித்து ஹிந்துக்களுடைய வேத சாஸ்திரங் களை அறிந்துகொள்ள வேண்டும்.

3. ஹிந்துக்களுடைய மனத்திலே மஹம்மதியர் நமது தேசத்தார் என்பதும், இஷ்ட தேவதை வேருக இருப்பதைப் பற்றி அவர்களை மிலேச்ச ரென்று நினைப்பதுகூடப் பிழையென்பதும் நன்றாக ஞாபகமிருக்க வேண்டும்.

4. மஹம்மதியரும் அங்ஙனமே ஹிந்துக்களை காபிர் (அவிசுவாஸிகள்) என்று நினைப்பது பெரிய தவறென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

5. விவாகம் முதலிய சோபன காலங்களில் ஹிந்துக்கள் மஹம்மதியரையும், மஹம்மதியர் ஹிந்துக்களையும் அழைத்து உபசாரங்கள் செய்து தனியாக விருந்துகள் செய்து வைக்க வேண்டும். ஹிந்துக்களுக்குள்ளே ஜாதிக் கட்டுகள் இருப்பதைப் பற்றி மஹம்மதியர் அருவருப்புக் கொள்ளக் கூடாது.

இங்ஙனம் பூரீ நாராயண சாஸ்திரி சொல்வதை

நாட்டிலுள்ள ஹிந்து மஹம்மதியத் தலைவர்கள் கவனித்து அந்தந்த இடங்களிலேயே இயன்ற வரை