பக்கம்:பாரதித் தமிழ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பாரதி தமிழ்

‘தமிழ்ப் புலவர்'களிடம் போனல் நிகண்டுக்குக்கூட அர்த்தம் தட்டும்படியான வார்த்தைகள் எழுதிக் கொடுப்பார்கள். ஸாமான்ய பாஷையில் எழுதும் தொழில் புலவர்களுக்குத் தெரியாது; பெரும்பாலும் இவர்களுக்கு ஸங்கீதமும் தெரியாது.

“தீவிரமான தாள கதியும், மதுரமான இசையும் உடையதாய் நர்த்தனத்திறகு உதவக் கூடிய பாட் டுக்கள் நாடகக்காரர்களுக்கு வேண்டும்.

‘தவிரவும், தமிழ் சங்கீதமும் பல வருவுங் களாகப் புதுமையும் உல்லாலமும் இழந்து சோர்ந்து கிடக்கிறபடியால், நாடகக்காரரும் நாடகம் பார்க் கும் பொது ஜனங்களும், ஹிந்துஸ்தானி, பார்ஸி மெட்டுக்களேயே விரும்புகிறார்கள். ஆகவே இப்படிப் பட்ட மெட்டுக்களுக்குச் பதங்கள் சேர்த்துக் கொடுப்போர் எவ்வளவு மூடர்களாக இருந்தபோதிலும், அவர்களை நாடகக்காரர் ஆவ அலுடன் ஏற்றுக் கொள்ளும்படி நேரிடுகிறது. கவிதா ரஸ்ங்களைப்பற்றி யோசனை செய்து கொண்டிருந்தால் அன்றன்றைக்கு நாடகம் நடக்கவேண்டுமே அதற் கென்ன செய்வது?...........புதிய கவிதை புலவர் களிடம் தோன்ற வேண்டும். புதிய மெட்டுக்கள், தமிழ்நாட்டு சங்கீத வித்வான்கள் ஏற்படுத்த வேண்டும். அப்போது தமிழ் நெறிக்கு இசையாத பார்ஸி மெட்டுக்களும், காதைத் தொளைக்கும் புமரமான பத வரிசைகளும் நாடகத்தை விட்டு நீங்கும்.”

குறிப்பு:- பல ஆழ்ந்த கருத்துக்கள் இக்கட்டுரையிலே இடம் பெற்றிருக்கின்றன. 1900-ல் பாரதியார் வெளியிட்ட இக்கருத்துக்களில் பலவற்றை இன்று நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்தாலும் அவற்றால் பெரிதும் நன்மை ஏற்படும்.

காந்தியடிகளைப் பற்றி முதல் முதலாக இக்கட்டுரையில் தான் பாரதியார் குறிப்பிடுகிறார் என்று கொள்ளலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/157&oldid=605429" இலிருந்து மீள்விக்கப்பட்டது