பக்கம்:பாரதித் தமிழ்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


t J&J 159

என்று தோன்றுகிறது. அவரைப் பற்றிப் பாடியுள்ள மஹாத்மா காந்தி பஞ்சகம் என்ற அழகிய பாடல் பிற்காலத் திலே பாடப்பெற்றது. அந்தக் காலத்திலே அவர் மஹாத்மா என்று போற்றப்படவில்லே அன்று அவர் வெறும் பூரீமான் காந்திதான்.

தாய் மொழியின் மூலமாகவே சகல சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்; அதுதான் உண்மையான கல்வி பரவுவதற்கு வழி என்பதைப் பாரதியார் அன்றே கூறி யிருப்பதை இன்று கூட நம்மவர்களிற் பெரும்பாலோர் உணர்ந்து கொள்ளாமலிருக்கிறார்கள்.

நாடகப் பாட்டு விஷயமா. அன்றிருந்த பிரச்சினை இன்றும் இருக்கின்றது. ஆனல் பெயர் மட்டும் மாறிவிட்டது. அதை இன்று சினிமாப் பாட்டு என்று கூறுகிருேம். பிரச்சினே ஒன்று தான். இதுபற்றிப் பாரதியாருடைய கருத்துக்களே எல்லோரும் ஆழ்ந்து த்ெ தித்துப் பார்க்க வேண்டும். முக்கிய மாக சங்கீத வித்வான்கள் இதை நன்கு மனத்திற்கொண்டு கச்சேரிகளிலேயும், ரேடியோவிலும், பிற இடங்களிலும் திருப்பித் திருப்பி ஒரு பத்துப் பன்னிரண்டு பாட்டுக்களையே பாடிக் கொண்டிருக்காமல் புதுப் பாடல்களைப் பாட வேண்டும் : மக்களுக்குப் புரியும்படியாகவும் அவர்களுடைய உள்ளத்திலே எளிதில் உணர்ச்சிகளே எழுப்ப உதவும்படியான தாய் மொழியிலும் பாட வேண்டும்.

  • ...