பக்கம்:பாரதித் தமிழ்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உல்லால சபை

காளிதாலன்

2 $) t r t i á 1 3) 1 (; ராக).ல பங்குனி 17

|ராகiல வருவும் பங்குனி மாதம் 10-ந் தேதி புதன் இழையன்று மாலை வேதபுரம் உல்லாஸ் சபையில் நடந்த செய்தி)

சபைக்கு வந்திருந்த பேர்:

(1) ஜிந்தாமியான் லேட் (2) வெங்கட்டராவ் (3) குண்டு ராயர் (4) குமாரசாமி வாத்தியார் (5) எலிக்குஞ்சு செட்டியார் (6) காளிதாஸன் (7) மணவாளன் செட்டியார்.

வராத பேர்:-கோமதி நாயகம் பிள்ளை, மாரப்ப முதலியார்.

எலிக்குஞ்சு செட்டியார் : இன்று சபாநாயக ராக இருக்கும்படி காளிதாஸரை வேண்டுகிறேன்.

காளிதாஸன் : எனக்குச் சம்மதமில்லை. வெங் கட்ராவைப் போடுங்கள்.

எலிக்குஞ்சு செட்டியார் : காளிதா ஸரே சபா நாயகராக வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறேன்.