பக்கம்:பாரதித் தமிழ்.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூச்சித் தேவன் 199

நடக்கவேண்டிய சங்கதியைச் சொல்லும்’ என்றான். சுப்பா சாஸ்திரி மஹா கோபத்துடன், செம்பை ஏனடா திருடிக்கொண்டு வந்தாய் ?’ என்று கேட்டார்.

பூச்சித்தேவன், ஐயோ, திருட்டுக் கிருட் டென்று பேசக்கூடாது, தெரியுமா ? ஜாக்கிரதை 1 பெரிய களவு கண்டு பிடித்துவிட்டார். இவர் ! உம் ! செட்டியாரே ! பார்ப்பான் கையிலே செம்பைக் கொடுத்துப் போகச் சொல்லும், களவு கண்டுபிடிக்க வந்தார் பெரிய களவு!” என்று நகைத்துக்கொண்டே அங்கிருந்து போய்விட்டான். செம்பு சுந்தரய்யங்கார் வீடு போய்ச் சேர்ந்தது.

பூச்சித்தேவனுக்குச் செல்வம் உண்டானது

பூச்சித்தேவன் கண்ணுக்கு நல்ல லக்ஷணமாக இருப்பான். ஜில்பாக் குடுமி, கொம்பு மீசை: மிருகவுடம்பு-பொதுவிலே அழகுள்ளவன். இப் படியிருக்கையிலே, கோட்டாவாசு'க் காலம் போய், அடுத்த ஜமீன்தார் பட்டத்துக்கு வந்தார். அவருக்கு அழகான சேவகர் வைத்துக் கொள்வதிலே பிரியமதிகம். இவனை வேலைக்கமர்த்திக் கொண் டார். நாளாக நாளாக இவன் மேல் அவருக்கு எந்தக் காரணத்தினலோ அளவு கடந்த அபிமான முண் டாய்விட்டது. எனவே, இவனுக்கு மறக் கூட்டத்தில் கவுரவமதிகப்பட்டது. டாளுக்காரர் இவனைக் கண்டால் இரட்டை ஸ்லாம் போடுவார்கள். எங்கேனும் பெரிய கொள்ளைகள், வழிப்பறிகள் நடந் தால் இவனுக்குப் பங்கு கொடுப்பதென்ற நியதி யேற்பட்டது. ஆபத்து வந்தால், ஜமீன்தாரு டைய தயவு மூலமாக இவன் காப்பாற்றுவானென்ற எண்ணம் திருடருக்கெல்லாம் உண்டாய்விட்டது. அக்காலத்தில் மதுரையிலே ஒரு பெரிய மிராசுதார்