பக்கம்:பாரதித் தமிழ்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

2

2

பாரதி தமிழ்

‘பருவமழையின் புழையொலி கேட்பீர், இங் கென் கிழச் செவிகளே.” இந்த ஒரு வசனம் ஒரு தனிக் காவியம். பாட்டே இவ்வளவுதான்.

மேற்படி ஹொக்குப்பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்யவேண்டும். படிப் பவனுடைய அனுபவத்திற்குத் தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும். பல பல பதங்களே அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது பிற ந் த கவிதையன்று. கேட்பவனுள்ளத்திலே கவிதை யுணர்வை எழுப்பி விடுவது சிறந்த கவிதை.

e +R 華

மற்றுமொரு நேர்த்தியான ஹொக்குப்” L1TL(5). cum Goyrr ud §6vé)3a1T (Basho Matsuso) என்றாெரு ஜப்பானியக் கவி யிருந்தார். இவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம். ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்று ரியே (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தான். இவர் ஒருநாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தமக்குத் தொல்லையாதலால் வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்து விட்டாராம்.

இவருக்கு காகா (Kaga) என்ற ஊரில் ஹொகூவி என்றாெரு மானக்கர் இருந்தார். இந்த ஹொகூவியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூவிப் புலவர் தமது குரு வாகிய வாஷோ-மத்ஸ்லிவோ’ என்பவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினர்.

‘தீப்பட்டெரிந்தது :

வீழு மலரின்-அமைதியென்னே !'