பக்கம்:பாரதித் தமிழ்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பாரதி தமிழ்

இவ்வாறு சேஷய்யங்கார் நெடுந்துாரம் சொன் ஞர். போகப் போக அவருடைய பிரசங்கத்தில் நான் கொஞ்சம் கவனக் குறைவாக இருக்கும்படி நேரிட்டது. ஏனென்றால் இவர் பேசிக் கொண் டிக்கும் போதே எங்கள் பக்கத்தில் ஒரு கிழவன் வந்து நின்றன். அவனுக்கு சுமார் அறுபது வய திருக்கும் போலே தோன்றிற்று. ஆனல் திடகாத் திரமுடையவன். அவன் சேஷய்யங்காருடைய பிர சங்கத்தை மிகவும் ஜாக்கிரதையாகக் கேட்டுக் கொண்டு வந்தான். சேஷய்யங்கார் சொல்லும் வார்த்தைகளிலே ஒன்றிரண்டைக் கேட்டுப் புன் பிரிப்புச் சிரித்தான். ஒரிரண்டு வார்த்தைகள் அவன் முகத்திலே கோபக் குறி விளைவித்தன. நான் அவனைக் கையினுல் சமிக்கை காட்டி என் னருகே வரும்படி சொன்னேன். ஸமீபத்தில் வந்தான். ‘நீ என்ன ஜாதி?” என்று கேட்டேன். ‘பறையன்’ என்றான். இதைக் கேட்டவுடன் சக்ர வர்த்தி சேஷய்யங்கார் திரும்பிப் பார்த்தார்.

II

சக்ரவர்த்தி சேஷய்யங்கார் கிழச் சாம்பானை உட்காரச் சொன்னர். அவன் உட்கார்ந்தான். “நான் சொல்லிய வார்த்தைகளை நீ மிகவும் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாயே, நீ யார்? உன் பெயர் என்ன?’ என்று சேஷய்யங்கார் சொன்னர்.

அப்போது கிழச்சாம்பான் சொல்லுகிருன்:

“சாமிகளே, நான் பஞ்சம ஜாதி. என் பெயர் லக்ஷ்மணன். பிராம்மணரே எங்களுக்கு குரு. முன் பொரு மாட்டுக் கொட்டகையில் எங்கள் தாயாகிய ஆதியை பகவன் என்ற பிராம்மணன் மனைவியாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/255&oldid=605580" இலிருந்து மீள்விக்கப்பட்டது