பக்கம்:பாரதித் தமிழ்.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விளக்கு 263

கொடுப்பதை ஒரு கடமையாக வைத்துக் கொண் டிருப்பதால் கொஞ்சம் நல்ல நிலைமையிலிருப்பதாகத் தோன்றுகிறது. பரோடாவில் கல்வி விருத்திக்கு வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின் றன. திருவாங்கூர், கொச்சி ஸ்மஸ்தானங்க

லுள்ள சுதேசி அதிகாரிகள் தமது கடமையை பரோடாவுக்கு முந்தியே படிப்பு விஷயத்தில் கொஞ் சம் அதிக சிரத்தையுடன் செலுத்தத் தொடங்கிய தாகவும் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் நம்மவர் சர்க்கார் அதிகாரிகளுடைய உதவியை எதிர்பார்ப் பது பயனில்லாத முறை. நாட்டை ஆளுவதிலே மிகுந்த செலவு உண்டாவதால் படிப்பை விருத்தி செய்யப் பண்மில்லை யென்று அதிகாரிகள் எத் தனேயோ தரம் ஸாங்கோ பாங்கமாகச் சொல்லி விட்டார்கள். படிப்புச் செலவுக்கென்று தனித் தீர்வை போடுங்கள்; ஜனங்கள் சந்தோஷத்துடன் செலுத்துவார்கள்’ என்று கோகலே விளக்கி விளக்கிச் சொன்னர். து சர்க்காருக்கு சம்மத மில்லை. ஆகவே, நமது தேசத்து ஜனங்களை ஐரோப்பாவிலுள்ள ஜாதியாரைப் போலவும் ஜப்பா னியரைப் போலும் படிப்பு மிகுந்த ஜனங்களாகச் செய்வதற்கு சர்க்கார் அதிகாரிகளிடமிருந்து பணம் கிடைக்குமென்று நம்பியிருப்போர் நெடுங்காலம் படிப்பில்லாமலே யிருப்பார்களென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குகிறது. திருவள்ளுவர் சொன்னர் :

‘விலங்கொடு மக்கள் அனேயர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்.”

படியாதவனுக்கும் படித்தவனுக்கும் தாரதம்யம் எத்தன்ை யென்றால், மிருகத்துக்கும் மனிதனுக்கும் உள்ளதத்தனை,