பக்கம்:பாரதித் தமிழ்.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


280 பாரதி தமிழ்

--

சித்தம். இங்கிலிஷ் படித்தவ்னுக்கு இந்த விஷ யத்தில் கொஞ்சமேனும் நம்பிக்கை கிடையாது. ருஷ்யாவிலே ராஜ்யம் புரண்டு போச்சுதாமே. ஜாதிகுல மெல்லாம் லோக முழுதிலும் தலைகீழாகக் கவிழ்ந்து போமென்று ஆணிபெஸன்ட் பத்திரிகை யில் போட்டிருந்ததாமே! தன் மத்யே இன்னு மொரு பேச்சு உம்மிடத்தில் கேட்க வேண்டு மென்று நினைத்துக் கொண்டே யிருந்தேன். ஆணி பெஸன்டுக்கு அஷ்டமாசித்துகளும் வருமென்று தஞ்சாவூரில் ஒரு பெரிய யோகீசுவரர் என்னிடம் நேரில் சொன்னர்...........உமக்குத் தெரியாதா? போகட்டும் போம்....மொத்தத்தில் உத்தம ஸ்த்ரீ. வெள்ளைக்கார ஜாதியில் பிறந்து நம்முடைய ஹிந்து மதத்தைச் சேர்ந்து விட்டதாக வாயினலே எப் போது சொன்னுளோ, அவள் நம்மைச் சேர்ந்தவ ளாகவே நினைக்க வேண்டும். இந்த விஷயத்தில், காளிதாஸ்ரே, நம்முடைய அபிப்பிராயமென்ன வென்றால், எந்தக் குலமாக, எந்த ஜாதியாக இருந்த போதிலும் நமது ஆலயத்தில் வந்து கும்பிட்டால் அவர்களே நாம் ஹிந்துவாக நினைத்து ப்ரேமை செலுத்த வேண்டும். இந்த ஆனிபெஸன்ட்கூட பூமி முழுதிலும் ஸ்ஹோதரத்தவமும் ஸ்மத்துவமும் ஏற்படப் போகிறதென்று சொல்லுவதாகக்கேள்வி. அந்த வார்த்தை ஸத்தியமாகத்தான் இருக்கும். அந்தம்மாள் வெகு தூரம் படித்தவளாமே? அஷ்டமாளித்தி பென்கிற வார்த்தை வந்தால் அஸாதாரணமான புத்தியாவது உண்டென்பது நிச்சயந்தானே? நம்முடைய சாஸ்த்திரங்களும் அப்படியேதான் சொல்லுகின்றன. கலி மேலே போகப் போக ஜனங்களுக்குள்ளே கலப்பு மிகுதிப் பட்டுக் கடைசியில் ஒரே குலமாய்விடுமென்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஆனல் அது கெட்ட அர்த்தத்திலே சொல்லுகிறது. எல்லாரும் ஒரே