பக்கம்:பாரதித் தமிழ்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ராயச்சித்தம் 279

மான சம்பந்தமுமில்லாமல் கத்தரித்து விட்டார். இவருடைய மனைவி மூலமாகக் காயிதப் போக்கு வரவு நடக்கிறது. அதில் கூட இவர் கவனம் செலுத்துவதில்லை. இதே காரணத்தை யனுசரித்து அதாவது இவருடைய மாப்பிள்ளை ரங்கூனுக்குப் போனதை உத்தேசித்து, இந்த சாஸ்திரிகள் தம்முடைய வைதிகத்தை மிகவும் விஸ்தாரப்படுத்தி வைத்திருக்கிறார். மற்றவர்களுடைய வைதிகம் ஆறு முழமென்று வைத்துக் கொண்டால் இவருடைய வைதிகம் பன்னிரண்டு முழம். இந்த ப்ராமணர் இங்கே வைதிகர்களுக்குத் தலைவர். இவரிடம் நான் போய் ராமராயருக்குப் பிராயச்சித்தம் செய்து வைக்க வேண்டு மென்று சொன்னேன்.

அப்போது மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் என்னைப் பார்த்து, “நீர் இந்த விஷயத்தை ஏன் கவனிக்கிறீர்?’ என்று கேட்டார். நான் வைதிக மென்றும் அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் கேள்விக்கு நான் மறுமொழி சொல்லாமல், “ஸ்முத்ர யாத்திரை செய்தவன் பண்ண வேண்டிய ப்ராயச்சித்த மெப்படி?” என்று கேட்டேன்; (இது வரைக்கும் சொன்ன கதை யெல்லாம் பீடிகை. இனிமேல் எழுதப் போகிற வசனங்களே நான் சொல்ல வந்த விஷயம். ப்ராயச் சித்தம் கடல் யாத்திரைக்கு எப்படி நடத்த வேண்டுமென்று நான் கேட்டதற்கு ரங்கநாத சாஸ்திரி சொல்லிய மறுமொழி கொஞ்சம் தர்க்க சாஸ்த்ர ஹானியாக இருந்த போதிலும் எனக்கே கேட்க ரஸமாக இருந்தபடியால், பிறருக்கும் தெரிவிப்போம் என்ற எண்ணத்துடன் இங்கெழுதலானேன்.) ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லுகிறார்:

‘இங்கிலிஷ் படித்தவன் பண்ணுகிற ப்ராயச் சித்த மெல்லாம் ஹம்ப்க் (பொய் வேஷப்)பராயச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/278&oldid=605620" இலிருந்து மீள்விக்கப்பட்டது