பக்கம்:பாரதித் தமிழ்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 பாரதி தமிழ்

ளெல்லாம் பராசக்தியின் வடிவங்களாகவே காட்சி யளிக்கத் தொடங்குகின்றனர்.

1907.ல் முதல் தடவையாக பாரதியாரின் மூன்று தேசீய கீதங்கள் ஸ்வதேச தேங்கள் என்ற பெயருடன் ஒரு துண்டுப் பிரசுரமாக வெளியாயின. இப்பிரசுரம் வெளியாவதற்கு வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் அவர்கள் நூறு ரூபாய் வழங்கியுள்ளார். துண்டுப் பிரசுரத்தை இலவசமாகப் பள்ளிகளுக்கும் பொது நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

1908-ல் பாரதியார் ஸ்வதேச கீதங்கள் என்ற நூலை வெளியிடுகிறார், ப தி ைன் கு பாடல்கள் அடங்கிய இதுவே அவருடைய முதல் நூலென்று கொள்ளலாம். அந்நூலை அவர்தம் குருவாகிய நிவே திதாதேவியாருக்கே ஸமர்ப்பண்ம் செய்திருக்கிரு.ர். “பூரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவ ரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கிய-தொப்ப, எனக்குப் பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர் களில் இச்சிறு நூலை ஸ்மர்ப்பிக்கின்றேன்’ என்று அவர் எழுதியுள்ளார்.

1908-ஆம் ஆண்டிலேயே பாரதியாரின் உரை நடைச் சிறு வெளியீடுகள் இரண்டு தோனறின.

ரத் காங்கிரஸிற்கு பாரதியார் சென்று திரும் யதின் விளைவாக அவை உருவாயின. ஒன்று

எங்கள் காங்கிரஸ் யாத்திரை மற்றாென்று புதிய கட்சியின் கோட்பாடுகள். பாலகங்கர்தர திலகர் 1907-ல் செய்த ஒரு சொற்பொழிவின் தமிழாக்கமே இந்த இரண்டாம் வெளியீடாகும்.

1909-ல் வெளியான ஜன்ம பூமி என்ற நூலில் பாரதியார் தமது குருவின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கே அந் நூலையும் ஸ்மர்ப்பிக்கிரு.ர்.