பக்கம்:பாரதித் தமிழ்.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபங்கா 305

ரணக் கழுதைகள் போல வாள்! வாள்!” என்று கத்தாமல் ஹஅ, ஹஅ, ஹூ என்று வெற்றிச் சங் கூதுவது போல கோஷிக்கலாயிற்று.

இந்த வேடிக்கையை நான் கவனித்துக்கொண் டிருந்தேன். அப்போது அஸாதாரண அப்ராக்ருத ஒலி யொன்று காதில் விழுந்தது.

ஒரு குருடன். பிச்சைக்கு வந்தான். அவனை ஐந்து வயதுள்ள ஆண் குழந்தை யொன்று கோலைப் பற்றி அழைத்துக் கொண்டு வந்தது. அவனுடன் ஒரு ஸ்திரீயும் வந்தாள்.

அந்தக் குருடனுக்குக் கண் தெரியுமோ, அதா வது அவன் மெய்க் குருடில்லையோ, வேஷக் குருடு தானே என்று எனக்கொரு சந்தேகம். அவனு டைய கண்ணைத் திறந்துகொண்டு தானிருந்தான். அதாவது, விழிக் கண் குருடு என்ற வகுப்பைச் சேர்ந்தவன் போலேயிருந்தான். அந்தக் கண்களை நான் பார்த்தேன். அவற்றில் புத்திக் குறிப்பு தகதகவென்று ஜ்வலித்துக் கொண்டிருந்தது. 55 வயதுள்ள கிழவன். சுக்குப் போலே, பனங் கிழங்கு போலே, ஒற்றை நாடியான, மிகவும் உறுதி கொண்ட உடம்பு. இடுப்புக்கு மேலே ஒட்டகத்தில் பாதிப் பங்கு கோணல் காணப்பட்டது. ஆனல் இயற்கையிலேயே கோணலா அல்லது அந்த மனி தன் வேண்டுமென்று தன்னுடம்பைக் கோண லாகச் செய்து கொண்டானே, என்னல் நிச்சய மாகச் சொல்ல முடியாது. செம்பட்டை மயிர். நெற்றியிலே பட்டை நாமம். ஆஹா! அவன் முகத்தின் அழகை-அதாவது குழிகள் விழுந்த, மேடு பள்ளமான, வெயிலில் மழையில் காற்றில் அடிபட்டு முதிர்ந்து, சதைப்பற்றுக் கொஞ்சமேனு மில்லாமல், ஆளுலும் சக்திக் களஞ்சியமாக விளங் கிய அவன் முகத்தின் அழகை-நான் எப்படி

பா. த.-20