பக்கம்:பாரதித் தமிழ்.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


328 பாரதி தமிழ்

களும் வேறு பலவிதமான குருவிகளும் பறந்து கூவி விளையாடிக் கொண்டிருந்தன. அணில்களும் ஓந்தி களும் ஆடியோடிக்கொண்டிருந்தன. காக்கைகளும், கிளிகளும், பருந்துகளும், தட்டான் பூச்சிகளும், வேறு பலவகை வண்டுகளும் ஒளிக்கடலிலே களித் தோணி கொண்டு நீந்துவதுபோல் உலாவி வந்தன. கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஒராண் குயிலும் ஒரு பெண் குயிலும் ஒன்றுக் கொன்று காதற் பாட்டுகள் பாடிக்கொண்டிருந்தன.

ஆண்குயில் பாடுகிறது:'து'ஹாலி, துஹலி, துஹ” துஹலி, துஹலி, துஹ” ராதா ரே.” (இதன் பொருள்:

நீ, நீ, நீ. நீ, நீ, நீ. ராதை யடீ.) பெண் குயில் பாடுகிறது:'துஹலி, துஹலி, துஹ” ராதா க்ருஷ்ண. க்ருஷ்ண, க்ருஷ்ண.’ வேப்பமரம் தனது பசிய இலைகளை வெயிலில் மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தது. “என்ன ஆச்சர்யமான கனவு கண்டோம்’ என் றெண்ணி யெண்ணி வியப்புற்றேன். இதற்குள் வெயிலேறலாயிற்று. எனக்கும் பசியேறத் தொடங் கிற்று. வேப்ப மரத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தோப்பினின்று புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.