பக்கம்:பாரதித் தமிழ்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேப்ப மரம் 327

யும் இங்கு ராம நதியில் ஜலக்ரீடை செய்து கொண் டிருந்த காலத்தில் நீ பார்த்துப் பெரு மகிழ்வெய்திப் பல ஆசீர்வாதங்கள் கூறினய். அதை நான் ஞான திருஷ்டியால் உணர்ந்தேன். அப்பால் சிறிது, நேரத்துக்கு முன்பு நான் யோக சமாதியிலிருந்த போது இந்தப் பாம்பு வருவதைக் கண்டு நீ என்னைக் காக்க விரும்பி என்னை எழுப்பும் பொருட்டாக என் மீது நின் இலைகளையும் பூக்களையும் சொரிந்தாய். இங்ஙனம் நீ என்னிடம் காட்டிய அன்பிற்குக் கைம் மாருக உனக்கு நான் ரிஷிபோதம் கொடுக்கிறேன். இதல்ை உனக்கு ஸ்கல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவ்ே உண்டாய்விடும். எல்லா ஜந்துக்களினிடத்திலும் ஸ்மமான பார்வை யும் ஸ்மமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர் களிடத்திலும் தன்னையே காண்பதாகிய தேவ திருஷ்டி ஏற்படும். இவற்றால் நீ ஜீவன் முக்தி பெறு வாய் என்றார். அது முதல் நான் அவர் கூறிய சக்தி களெல்லாம் பெற்று, யாதொரு கவலையுமில்லாமல் யாதொரு பயமுமில்லாமல் ஜீவன் முக்தி பத. மடைந்து வாழ்ந்து வருகிறேன்’ என்று வேப்ப மரம் சொல்லிற்று. உடனே நான் அந்த வேப்ப மரத்தடியில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி னேன். “உனக்கென்ன வேண்டும்?’ எ ன் று கேட்டது. அப்போது நான் அந்த வேப்ப மரத்தை நோக்கி:- உனக்கெப்படி அகஸ்த்யர் குருவோ அப்படியே நீ எனக்கு குரு. அந்த முனிவர் உனக் கருள் புரிந்த ஜீவன் முக்தி பதத்தை நீ எனக்கருள் புரியவேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தேன்.

“கொடுத்தேன்” என்றது வேப்ப மரம்.......

இந்த ஸமயத்தில் நான் உண்மையாகவே தூக்கந் தெளிந்து கண்ணே விழித்தெழுந்து நின் றேன்; எழுத்தாணிக் குருவிகளும், சிட்டுக் குருவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/326&oldid=605696" இலிருந்து மீள்விக்கப்பட்டது