பக்கம்:பாரதித் தமிழ்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பாரதி தமிழ்

மல்லிகைப்பூச் செடிகள்; சில ரோஜாப்பூச் செடிகள். அக்கிணற்றிலிருந்து அதற்கடுத்த வீதியி யிலுள்ள பெண்களெல்லோரும் ஜலம் எடுத்துக் கொண்டு போவார்கள்.

இந்தக் கதை தொடங்குகிற அன்று காலேயில் அங்கு காந்தாமணியும் பாட்டியையும் தவிர ஒரு குருட்டுக் கிழவர் தாமே ஜலமிறைத்து ஸ்நானத் தைப் பண்ணிக் கொண்டிருந்தார். போலீஸ் உத்தியோகத்திலிருந்து தள்ளுபடியர்கி அதிலிருந்து அந்தக் கிராமத்துக்கு வந்து தமது வாழ்நாளின் மாலைப் பொழுதை ராமநாமத்தில் செலவிடும் பார்த்தசாரதி அய்யங்கார் அங்கு பக்கத்திலே நின்று கிழவியைப் குறிப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த்ார்.

மேற்படி கிணற்றுக்கருகே ஒரு குட்டிச்சுவர். அதற்குப் பின்னே ஒரு வேப்பஞ் சோலை. அங்கு பல மூலிகைகளிருக்கின்றன. அவற்றுள் ஒன்று மிகுந்த பசி உண்டாக்குமென்று என்னிடம் ஒரு சாமியார் சொன்னர். அது கொண்டு நான் மேற்படி மூலிகையைப் பறித்து வரும் பொருட்டாக அந்தச் சோலைக்குப் போயிருந்தேன். வானத்தில் குருவிகள் பாடுகின்றன. காக்கைகள் கா, கா’ என்று உபதேசம் புரிகின்றன. வானவெளியிலே ஒளி நர்த்தனம் பண்ணுகிறது. எதிரே காந்தாமணியின் திவ்ய விக்ரஹம் தோன்றிற்று.

“உங்கப்பா பெயரென்ன?’ என்று பாட்டி காந்தாமணியிடம் கேட்டாள்.

“எங்கப்பா பெயர் பார்த்தசாரதி அய்யங்கர்ர்’ என்று காந்தாமணி புல்லாங்குழலைப் போல் ஊதிச் சொன்னுள். கிழவி, போலீஸ் பார்த்தஸ்ராதி அய்யங்காரை நோக்கி, ஒரு முறை உருட்டி விழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/329&oldid=605700" இலிருந்து மீள்விக்கப்பட்டது