பக்கம்:பாரதித் தமிழ்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியார் வாழ்க்கை வரலாறு 33

1907 மே 18-க்குப் பிறகு மித்திரனில் அவ் வாண்டு டிசம்பர் 17-ல் தான் சூரத் காங்கிரசுக்குச் செல்ல விரும்பும் பிரதிநிதிகளுக்குப் பாரதியார் ஒர் அறிக்கை விடுத்திருக்கிறார். அதனல் மே மாதத் திற்குப் பிறகே அவருக்கும் சுதேசமித்திரனுக்கும் இருந்த தொடர்பு நீங்கியிருக்குமென்று ஊகிக்கலாம்.

விபினசந்திரபாலரைப் பற்றிய கட்டுரையின் போக்குக்கும், பாரதியார் அதுவரை மித்திரனில் எழுதியவற்றின் போக்கு ‘கும் நல்ல வித்தியாச மிருப்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

விபினசந்திரபாலரின் சென்னை விஜயம், சூரத் காங்கிரஸ் ஆகிய இரண்டு சம்பவங்களும் பாரதி யாரின் எழுத்திலும் கொள்கையிலும் மிகப் பெரிய மாறுதலை யுண்டுபண்ணி யிருக்கின்றன. சூரத் காங்கிரஸ் பர்ரதியாரின் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத் தொடக்கம் என்று கூறலாம்.

விபினசந்திரபாலர் வங்காளத்து தேசீய வீரர் களில் ஒருவர். உணர்ச்சிப் பெருக்கோடு பேசக்கூடிய நாவலர். அவருடைய பேச்சு மக்களின் உள்ளத்திலே புதியதோர். சுதந்தர_ ஆவேசத்தை வளர்த்தது. ஆந்திர நாட்டுக்கு வந்திருந்த அவரைச் சென்ன்ைக்கும் வரும்படி செய்ததற்குப் பாரதியாரும் அவருடைய நண்பர்களுமே காரணஸ்தர் என்று வ. ரா. குறிப் பிடுகிரு.ர்.

1907 மே 9-ஆம் தேதியன்று பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் பர்மாவுக்கு நாடு கடத்தப் பட்டார். அதையொட்டி மே 17-ஆம் தேதி சென்னை விக்டோரியா நகர மண்டபத்திலே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விபினசந்திரபாலர் பேசினர். மற்றும் சில கூட்டங்களிலும் பேசினர். அவருடைய வீராவேச மொழிகளால் சென்னையில் தேசியக் கனல்

பா. த.-3