பக்கம்:பாரதித் தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பாரதித் தமிழ்


அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்கு வாய்ப்பள்ளிக்க ஒரு தனிப்பத்திரிகை ஒன்று கிடைத்தது. மண்டயம் குடும்பத்தைச் சேர்ந்த நா. திருமலாச் சாரியர் என்பவர் தேசப்பற்று மிக்க ஒரு செல்வர். திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்த அவர் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியா என்ற தமிழ் வார இதழ் ஒன்றைத் தொடங்கினர். அந்த இதழ் பாரதியாரின் உணர்ச்சிகளே. வெளியிடும் கருவியாக அமைந்தது. பாரதியார் அதன் ஆசிரியராகயிருந்தபோதிலும் சட்ட முறைப்படி அவர் பெயர் ஆசிரியரெனக் குறிப்பிடப்பட்டவில்லை. இந்தியா “அதன் சொந்தக்காரர் எம். பூரீனிவாஸ்ன் என்பவரால் பாப்பாம்ஸ் பிராட்வே 34-வது எண்ணில் இந்தியா பிரஸ்ஸில் வெளியிடப்படுகிறது” என்று இருந்தது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிஷ்யராகிய சுவாமி அபேதாநந்தர் 1906 ஜூலை 15-ம் தேதியன்று சென்னைக்கு விஜயம் செய்தார். அவருடைய வருகையைப் பற்றியும் சொற்பொழிவைப் பற்றியும் பாரதியார் இந்தியா பத்திரிகையிலே 1906 ஜூலை 21-ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறர்.

ஆனால் இந்தியா தோன்றியதும் பாரதியார் சுதேசமித்திரனைவிட்டு முற்றிலும் விலகிவிட்டதாகக்கிகொள்ள முடியாது. 1907 மே 18-ஆம் தேதியன்று கூடப் பாரதியாரிள் கட்டுரையொன்று மித்திரனில் வெளியாகியுள்ளது. சென்னை வாசிகளின் நிதானமும் விபினசந்திரபாலரின் சந்திதானமும் என்ற அக்கட்டுரைதான் அவர் புதுச்சேரி செல்லுமுன்பு மித்திரனில் எழுதிய கட்டைசிக் கட்டுரையென்று தெரிகிறது. அதன் பிறகு 1915 ஜூன் 15-ல் தான் மறுபடியும் மித்திரனில் அவருடைய கட்டுரை வெளியாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/32&oldid=1539885" இலிருந்து மீள்விக்கப்பட்டது