பக்கம்:பாரதித் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியார் வாழ்க்கை வரலாறு 31

கின்ற பருவம் அது. உயர்ந்த லட்சியங்களெல்லாம் ஓங்கியெழும் பருவமும் அது. வங்காளத்திலே குமிழி விட்டெழுந்து கொண்டிருக்கும் தேசீய உணர்ச்சி அவர் உள்ளத்தைத் தாக்கியிருக்க வேண்டும். வெறும் சமஸ்தான வித்துவானக நின்றுவிடாமல் தேசீயக் கவியாக மாறுவதற்கு வேண்டிய உள்ளுணர்வைப் பெறக்காசி வாழ்க்கையும் பாரதியாருக்கு உதவிற்று என்று கூறலாம். அந்தத் தேசிய உணர்ச்சி பிற்காலத் திலே சென்னை வாழ்க்கையிலே நன்கு மலரலாயிற்று.

காசியிலிருந்தபோது பாரதியாருக்கு வடநாட்டி லேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணம் இருந்த தாம். ஆனல் டில்லி தர்பாருக்குச் சென்று திரும்பிய எட்டையபுரம் மகாராஜா காசிக்கு வந்தபோது பாரதியாரை எட்டையபுரம் வரும்படி அழைத் ததால் அதற்கிணங்கிப் பாரதியார் ஊர் திரும்பினர். (திருமதி செல்லம்மா பாரதி-பாரதியார் சரித்திரம்.)

சுதந்தர உணர்ச்சி பெற்ற பாரதியாருக்குச் சமஸ்தான சேவை பிடிக்காது போனதில் ஆச்சரிய மில்லை. சுதந்தரத்தோடு வாழ விரும்பி அவர் எப்படியாவது எட்டையபுரத்தைவிட்டு வெளியேற உத்தேசித்திருக்க வேண்டும். 1902-ஆம் ஆண்டில காசியை விட்டு எட்டையபுரம் திரும்பியவர் 1904 ஆகஸ்டு முதல் தேதியிலேயே மதுரையில் தமி ழாசிரியராகி விடுகிறார். இரண்டு ஆண்டுகள்கூட அவரால் சமஸ்தான வித்துவானக இருக்க முடிய வில்லை.

தாற்காலிகத் தமிழாசிரியர் பணியை விட்டு நீங்கி பாரதியார் சென்னை வந்ததும், சுதேச மித்திரனில் உதவியாசிரியர் ஆனதும் முன்பே நமக்குத் தெரியும். பாரதியாரின் உணர்ச்சிகளை யெல்லாம் தடையின்றி வெளியிட அப்பொழுது