பக்கம்:பாரதித் தமிழ்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பாரதி தமிழ்

துருக்கியின் நிலை

துருக்கிக்கும் நேசக் ககதியாருக்கும் நடந்த உடம்பாட்டைத் துருக்கி இன்னும் உறுதி செய்ய வில்லை. மறுபடியும் ஒரு முறை தேசீயக் ககதியாரால் துருக்கிக்குச் சற்றே ஸெளகர்யம் ஏற்படலாமென்று தோன்றுகிறது. பால்கன் யுத்த முடிவில் துருக்கி தோற்றுப் போய்விட்டது. .ே த சீ யக் கrதிக்கு விரோதமான மனிதர் துருக்கியில் ஆட்சி செலுத்தி வந்தனர். அவ்ர்களுடைய கொள்கை எப்படி யிருந்த தென்றால்:-உள்நாட்டில் தேசீயக் ககதியாரின் சக்தி யைக் குறைக்கும் பொருட்டு, அன்னியரின் உதவி பெற்று அதல்ை அந்த அன்னியர்கள் நம்மைக் குதிரை யேறக்கூடிய நிலைமை ஏற்பட்டாலும் பெரி தில்லை; நாட்டை அன்னியர் கொண்டு போனலும் போகுக: ஆளுல் தேசீயக் ககதியார் ஆளக் கூடாது. இங்ஙனம் கருதும் மனிதர் செய்துகொண்ட உடம் பாடு எப்படி யிருக்கும்! மேலும், லண்டன் நகரத்தில் பால்கன் தேசத்தார்களுக்கும் துருக்கிக்கும் உடம் பாடு கையெழுத்திடப்பட்டது. அதில், மற்ற நிபந் தனைகளுடனே, அட்ரியாநோபிள் ஜில்லாவைத் துருக்கி விட்டுவிட வேண்டுமென்ற நிபந்தனையும் சேர்ந்திருந்தது. அக்காலத்தில், அன்வர்பாஷா முதலிய தேசீயக் கrதித் தலைவர்கள் துணிவாகவும் தைரியமாகவும் வேலை செய்தபடியால் துருக்கிக்கு அட்ரியா நோபிள் நஷ்டமாகாமல் மிஞ்சிற்று. திடீ ரென்று அன்வர்யாஷர் முன்னிருந்த கோழை மந்திரி களைத் தூக்கி எறிந்துவிட்டு, அதிகாரத்தைக் கைவசப் படுத்திக்கொண்டு, அட்ரியா நோபிளை இழக்கப் போவதில்லை யென்று தெரிவித்துவிட்டார். இதற்குள், பால்கன் தேசங்கள் ஒன்றுக்கொன்று போராடத் தொடங்கித் தங்கள் மனஸ்தாபங்களைத் தீர்ப்பதற்குப் பிறர் மத்யஸ்தத்தை வேண்டக்கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/347&oldid=605728" இலிருந்து மீள்விக்கப்பட்டது