பக்கம்:பாரதித் தமிழ்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பாரதி தமிழ்

மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் எடுத்துக் காட்டுகிரு.ர். ஏனென்றால், ஐர்லாந்துக்கு ஸ்வராஜ்யம் கொடுப் பதில் கடற் சண்டைத் தயாரிப்புக்களுக்கு ஸ்தலங்க ளாகக்கூடிய துறைமுகங்களின் மேற்பார்வை ப்ரிடிஷ் கவர்ன்ம்ெ.ண்டாரிடம் வைத் துக் கொள்ளலர் மென்று மிஸ்டர் ஆஸ்க்வித் சொல்லுகிரு.ர். அப்படி யானுல், கானடா, ஆஸ்திரேலியா முதலிய குடி யேற்ற அரசுகளின் ஸ்தானத்தை ஐர்லாந்துக்குக் கொடுப்பதாக மாட்டாது. ஏனென்றால், கானடா, ஆஸ்திரேலியா முதலிய குடியேற்ற நாடுகள் தம் துறைமுகங்களின்மீது பரிபூர்ண்ம்ான, வகுக்கப் படாத தணியதிகாரம் செலுத்தி வருகின்றன.

மேலும், 1918-ஆம் வருஷத்தில் ஐர்லாந்து தேசத்து “ஸின்பீன்” கrயார் ஜெர்மனியுடன் கலந்து ப்ரிடிஷ் அரசாட்சிக்கு விரோதம்ாக நடத்திய சூழ்ச்சியைப்பற்றிய அறிக்கை யொன்று சீக்கிரத்தில் ஸ்ர்க்காரால் ப்ரசுரம் செய்யப்படுமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தெரிவித்தார்

ஐர்லாந்து தேசத்துக் கடல் துறைகள் ப்ரிட னுக்கு எத்தனை விபத்தாக மாற்றத்தக்கன வென் பதும், ‘ளின்பீன்”கள் அவற்றை எங்ஙனம் பயன் படுத்தச் சதியாலோசனை நடத்தினர்களென்பதும், அவர்கள் அங்ஙனம் பயன்படுத்த முடியாமற் போயினதெப்படி யென்பதும், அவர்களை இங்கி லாந்து தன் கைக்குள் இறுகப் பிடித்துக் கொண்டிரா விட்டால் இன்னும் அப்படியே வேலை செய்வார்க ளென்பதும் ஸர்க்கார் ப்ரசுரம் செய்யப் போகிற அறிக்கையில் நன்றாக விளங்குமாம். ஆதலால்,

ர்லாந்தை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கும் கைப் டியை நெகிழவிடப் போவதில்லையென்று மிஸ்டர்

லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லுகிரு.ர்.

இங்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/355&oldid=605741" இலிருந்து மீள்விக்கப்பட்டது