பக்கம்:பாரதித் தமிழ்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திரட்கு

சக்திதாஸன் 19 நவம்பர் 1920 ரெளத்திரி கார்த்திகை 5 (1) ஐரிஷ் நிலைமை

ஐர்லாந்துக்கு விடுதலை கொடுக்கும் பகrத்தில் அது ஐர்லாந்து இங்கிலாந்துக்கு விரோதமான செய்கைகள் செய்வதுமன்றி, இங்கிலாந்துக்குப் பகையான மற்ற நாடுகளும் தீங்குகள் செய்வதற் கோர் தூண்டுதலாக இருக்குமென்ற அர்த்தத்தில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சில தினங்களின் முன்பு காமன்ஸ் ஸ்பையில் பேசியதைக் குறித்து ஏற் கெனவே நமது பத்திரிகையில் எழுதி யிருக்கிறேன். வேறு பல ப்ரிடிஷ் ராஜ தந்திரிகளும் ஐர்லாந்தைக் குறித்துப் பேசுமிடத்தே அந்நாடு இங்கிலாந்தின் பாரிசத்திலுள்ளதொரு சத்துருவென்று சொல்லி வருகிறார்கள். “ஐரிஷ் குடியரசின் ஜனதிபதியாகி, அமெரிக்காவுக்குப் போய் வளிக்கும் மிஸ்டர் டி-வலேரா என்பவருடைய ஸ்தானத்தில் வேலை பார்த்துவரும் மிஸ்டர் ஆர்தர் (g) க்ரி (f) பித்ஸ் என்பவர் ப்ரசுரம் செய்திருக்கும் அறிக்கை யொன் றில் நாம் எதிர்பார்த்த வண்ணமே மேற்கூறிய ப்ரிடிஷ் ராஜ்ய தந்திரிகளின் கொள்கையை மறுத்துப் பேசுகிரு.ர். நீங்கள் உங்களுடைய கொள்கை களாலேயே ஐர்லாந்தைப் பகையாகச் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/360&oldid=605749" இலிருந்து மீள்விக்கப்பட்டது