பக்கம்:பாரதித் தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

39



ஆதலால் பாரதியார் புதுச்சேரிக்குச் செல்லுவது உசிதம் என்று அவருடைய நண்பர்கள் தூண்டியிருக்க வேண்டும். அவரும் புதுச்சேரி சென்றார். மண்டயம் பூரீநிவாசாச்சாரியாரும் அங்கு போய்ச் சேர்ந்தார். அச்சியந்திரங்களும் போய்ச் சேர்ந்தன. இந்தியா பத்திரிகை புதுச்சேரியிலிருந்து 1909 அக்டோபர் 20-ஆம் தேதி முதல் வெளிவரத் தொடங்கியது.

ஆகவே அரசாங்கத்தின் பிடியிலகப்படாமல் தொடர்ந்து தேச சேவை செய்ய முடியுமானல் அதற்கான முயற்சியைச் செய்யவேண்டுமென்பதே பாரதியாருக்கும் அவரடைய நண்பர்களுக்கும் எண்ணம் என்று தெரிகிறது.

புதுச்சேரி வாழ்க்கை இனிமையாக இருக்குமென்று நினைத்துப் பாரதியார் அங்கு சென்றதாகக் கொள்ளுவதற்கில்லை. அவருக்கு அங்கே வாழ்க்கை இன்பமாக நடைபெறவுமில்லை. எத்தனையோ தொல்லைகள், துன்பங்கள்.

முதல் முதல் பாரதியார் புதுவை ஈசுவரன் கோவில் தெருவில் திரு.மு.இராஜபாதரின் இல்லத்திற்கு அடுத்த ஒரு சிறு வீட்டில் குடியிருந்தார். பிறகு அவ்வீட்டைக் காலி செய்து, அதே வீதியில் 28-ஆம் எண்ணுள்ள ஒரு மாடி வீட்டில் குடியேறினர்.

அது ஒரு செட்டியாருக்குச் சொந்தம். அவர் பெயர் ஐயாக்கண்ணு செட்டியார். அவர் குள்ளமாக இருப்பார். தயாள குணம் உள்ளவர். இவரைப் பாரதியார் வேடிக்கையாக 'விளக்கெண்ணெய்ச் செட்டியார்' என்று அழைப்பதுண்டு. (திரு. ரா. கனகலிங்கம்-என் குருநாதர் பாரதியார்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/39&oldid=1539906" இலிருந்து மீள்விக்கப்பட்டது