பக்கம்:பாரதித் தமிழ்.pdf/401

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரே மாதிரியாகவே இருப்பதாகத் தோன்றினும், ஆழ்ந்து கவனிக்கும்போது. வேற்றுமை புலப்படும். மேற்றிசை நாகரிகத்தின் ஆதிக்க்ம் இங்கு தொடங் கிய காலத்துக்கு முன்பு நம் நாட்டுத் தொழிலாளிகள் பெரும்பாலும் தத்தம் தொழில்களுக்குத் தாமே முதலாளிகளாகவும் இருந்தனர். முதலாளி ஒருவன் பணம் போட்டுப்பலரைக் கூலியாட்களாக்கி, வேலை வாங்கி அவர்களுக்குக் சொற்பக் கூலி கொடுத்து விட்டு, அவர்களுடைய தொழிலால் உற்பத்தியான பண்டங்களை விற்றுக் கின்டக்கும் லாபத்தில் பெரும்பகுதியைத் தான் அழுத்திக்கொள்ளும் முறை இந்தியாவில் ஸாதாரணமாகக் கிடையாது. இது நம்முடைய தேசத்து நாகரிகத்தின் நோக்கத் துக்கு மாருணமுறை. இந்த உண்மையை அன்னிய ராயினும், கர்னல் வெட்ஜ்வுட் ஸ்-லபமாகத் தெரிந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இங்கிலாந்திலும், பிற இடங்களிலுமுள்ள தொழிற் ககதியார் நமக்கு எங்ஙனமேனும் ஸ்வராஜ்யம் கொடுக்கும்படி ப்ரிடிஷ் ராஜாங்கத்தை வற்புறுத்தக் கூடுமாயின், அதல்ை உலக முழுமைக்கும் நன்மை யேற்படும். மேற்றிசையின் தற்கால நாகரிகம் அநியாயத்தைப்பற்றி நிற்பதென்றும், ஆதலால் அழித்துவிடத்தக்கதென்றும் கர்னல் வெட்ஜ்வுட் சொல்லுகிரு.ர். அதை நாமும் அங்கீகாரம் செய் கிருேம். ஆனல் அந்த அநியாய நாகரிகத்தை அழிக்கும் உபாயமெப்படி? நியாயத்தைக் கொண்டு நிறுத்தினல் அநியாயம் தானே அழிந்து விடும். சிலர் அநியாயத்தை அழிப்பதற்கு மேன்மேலும் அதிக அநியாயம் பண்ண வேண்டுமென்று நினைக் கிறார்கள். ஆனால் உண்மை அப்படியில்லை. நியாயம் ஸாதிப்பது ஸ்-லபமென்றும், லாபகரமென்றும், மனிதர் தெளிவாக அறிந்துகொண்ட மாத்திரத்தில் அநியாயத்தைத் தாமே நிறுத்தி விடுவார்கள்.