பக்கம்:பாரதித் தமிழ்.pdf/404

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விசேஷக் குறிப்புகள் 405

வருஷத்தில் நாகரிக உலக முழுதிலும் இலக்கியத் திலும், சாஸ்திரத்திலும் மிகச் சிறந்த வித்வான் களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. ரவீந்த்ரநாத் டாகுருக்குக் கிடைத்த:வெகுமதி ரூபாய்க் கணக்கில் சுமார் லக்ஷத்திருபதாயிரமாயிற் றென்பது நம்ம வருக்கு நினைப்பிருக்கக்கூடும். ப ரி சு இத்தனை பெரும் தொகையாக இருப்பது மன்றி, இதனைப் பெறுவோர் உலகத்து வித்வான்களில் சிறந்தோ ரென்ற ஸ்தானமும் ஏற்படுவதால், ஒவ்வொரு தேசத்தாரும் தத்தம் நாட்டுக் கவியரசர்களுக்கு அந்த ஸம்மானம் கிடைக்க வேண்டு மென்று விரும்புகிரு.ர்கள். அப்படிப்பட்ட இ ந் த ப் பரிசு களில் இலக்கியப் பரிசு (1919 ஆம் வருஷத்துக் குரியது) ஸ்விட்ஜர்லாந்து தேசத்துக் கவியாகிய கார்ல் ஸ்பித்தலர் என்பவருக்குக் கிடைத்திருக் கிறது. 1920ஆம் வருஷத்துக்குரிய மே ற் படி ஸம்மானத்தை நார்வே தேசத்துப் புலவராகிய நட்ஹாம்ஸன் என்பவர் பெற்றிருக்கிரு.ர்.

3. கார்ல் ஸ்பித்தலர் இவர் ஸ்விட்ஜர்லாந்து தேசத்தில் லுலெர்ன் நகரத்தில் பிறந்தவர். இவருக்கு இப்போது 75 வயதாகிறது. ஜெர்மனி தேசத்துக் கீர்த்திபெற்ற பண்டிதராகிய நியட்ஷ் என்பவருக்கு ஸ்மானமாக இவரைச் சிலர் சொல்லுகிறார்கள். 1889 ஆம் வரு ஷத்தில் இவர் “ப்ரொமீதியஸ்’, ‘எபிமெத்துஸ்” என்ற இரண்டு நூல்கள் வெளியிட்டார். இவருக்கு இந்த வெகுமானம் கிடைத்ததுபற்றி:::ஸ்வீடன் தேசத்திலும் இங்கிலாந்து முதலிய இடங்களிலும் சில பத்திரிகைகள் மிக ஆச்சர்யப் படுகின்றன. இவர் ஏற்கெனவே எழுதியுள்ள நூல்களில் நல்ல திறமை காண்பிக்கப்பட்டிருப்பது:மெய்யேயாயினும் வயது மிகுதியால் இப்போது இவர் சக்தி குன்றிப்