பக்கம்:பாரதித் தமிழ்.pdf/432

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில குறிப்புகள்

சக்திதாஸன்

8 பிப்ரவரி 1921 ரெளத்திரி தை 27

கட்டாயக் கூலி

சிம்லா பிரதேசங்களிலும், அவற்றையடுத்த குமாலன் பிரதேசங்களிலும் கட்டாயக் கூலி முறை இன்றும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. எவ ராவது நிர்வாஹ உத்தியோகஸ்தர் அல்லது ராணுவ உத்தியோகஸ்தர் அல்மோரா, நைநிதல், கட்வால் என்ற ஜில்லாக்களில் யாத்திரை செய்வாராயின், :பட்லாரி’ எனப்படும் கிராமாதிகாரிகளுக்கு இத்தனை கூலியாட்கள் தயார் செய்து கொடு, கும் படி கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. பட்லாரியாரை வேண்டுமானுலும் கூப்பிடலாம். அங்ஙனம் மைல் கணக்காக நடந்து வந்து, பிறகு மைல் கணக்காக மூட்டைகளைச் சுமந்து சென்று மீட்டும் அந்தக் கூலி யாட்கள் தத்தம் வாஸஸ்தலங்கள் போய்ச் சேர மூன்று நாட்கள் பிடிக்கின்றன். இந்த மூன்று நாளுக்கும் சேர்த்துச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆறன. மகன் சாகக் கிடக்கும்போது பிதாவைக் கூலிவேலைக்கழைத்தால் அப்பிதா தன் மகனைக் கவனியாமல், துரைக்கு மூட்டை சுமக்க வந்து தீரவேண்டும். வராவிட்டால் 5 ரூபாய் அபராதம்.

பா.த.-28