பக்கம்:பாரதித் தமிழ்.pdf/434

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில குறிப்புகள் 435

நிலைமையிலிருக்கிறார்களென்று மிஸ்டர் ஸி. எப் ஆண்ட்ரூஸ் தெரிவிக்கிரு.ர். இதையும், உத்யோகஸ் தர்களுக்கு காய், கறி, ஆடு, கோழி, ரொட்டி மா, விறகு முதலியன ஜனங்களிடம் பெறும் முறையையும் நாட்டில் வைத்தாதரிக்கும் ரா ஜா ங் க த் தா ர் நாகரிகப் பதவியுடையவர்களாக மாட்டார்கள்.

“கெலாவ’ ராம ராயனிங்காரின் ஸ்மத்வ ஞானம்

சில தினங்களின் முன்பு அமலாபுரத்தில் பஞ்ச மர்களின் பிரதிநிதிக் கூட்டமொன்று நம் மாகா ணத்துப் புதிய பிராமணரல்லாத மந்திரிகளை ஸ்ந்தித்தபோது அம்மந்திரிகளில் ஒருவராகிய பூரீமான் ராமராயனிங்கார் மிகவும் ரஸ்மாகப் பேசி யிருக்கிரு.ர். இதுவரை பிராமணரல்லாத வகுப்பினர் பஞ்சமர்களிடம் தக்கபடி அனுதாபம் செலுத்தாமல் இருந்து வரும் காரணம் பிராமணர்களுக்கு மன வருத்த முண்டாகுமென்ற பயத்தைத் தவிர வேறில்லை யென்றும், இப்போது பிராமணரல்லா தாரில் மேற்குலத்தார் பிராமர்களின் ஆதிக் கத்தை உதறி எறிந்து விட்டபடியால், இனிமேல் பிராமணரல்லாதார் பஞ்சமர்களே மிகவும் ஆதரிக்கத் தொடங்கி விடுவார்களென்றும் இந்த மந்திரி சொன்னர். மேலும் இனிமேல் பிராமணரல்லா தோரில் மேற்குலத்தார் பஞ்சமர்களைப் பரிபூர்ண ஸ்மத்வத்துடனும் சொந்த ஸ்ஹோதரர் போலவும் நடத்த முற்றிலும் விருப்பத்தோடிருக்கிறார்கள் என்று இவர் சொன்னர். இங்ஙனம் இவர் பிராமண ரல்லாதோரும் பஞ்சமரல்லாதோருமாகிய மற்ற ஹிந்துக்கள் அனைவரும் இப்போதே பஞ்சமர்களை முழுதும் ஸ்மானமாக நடத்த உடன்படுகிறார் களென்று எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு உறுதி சொல்லுகிருரென்பது நமக்கு விளங்கவில்லை.