பக்கம்:பாரதித் தமிழ்.pdf/467

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 பாரதி தமிழ்

டார்கள். ஆதலால், கிரேக்கர் தமது படையை மிகுதி செய்வதில் அதிக சிரத்தை செலுத்தி வரு கிறார்கள். ஜெர்மனியிலுள்ள சட்ட அனுமதி பெருத படைக் கூட்டங்களைக் கலைத்துவிட வேண்டுமென்று நேசக் ககதியார் எவ்வளவோ சொல்லிக்கொண் டிருக்க, அதை மீறி ஜெர்மானியர் இன்னும் ரஹஸ்ய மாகப் படைகளைத் திரட்டிவருகிறார்கள். ஜப்பானும் அமெரிக்காவும் கப்பற் படைகள் கட்டும் விஷயத்தில் தீவிரமான வேலை செய்து வருகின்றன. ஆஸ்த்ரேலி யாவும் கனடாவும் தமக்குக் கப்பற் படைகள் அமைக்துக்கொள்ள முயலுகின்றன. இங்கிலாந்து தனது லைந்யத்தை அதிகப்படுத்த முயற்சி செய் கிறது. இவர்களெல்லாரும் உலகத்தில் நித்யமாகவும நிரந்தரமாகவும், சாசுவதமாகவும் ஸமாதானம் நின்று நிலவ வேண்டுமென்ற கொள்கையையே தரித்திருப்பதாாகச் சில ஸ்மயங்களில் பேசிக் கொள்ளுகிரு.ர்கள். ஆனல் லதா மண்ணுசை காரணமாகப் படைகளைப் பலப்படுத்திக் கொண் டிருக்கிறார்கள். இவர்களுடைய குணம் இந்த மாஸம் (பெப்ருவரி) 11-ஆந் தேதி வெள்ளிக்கிழமை காலையில், திருவாங்கூர் எல்லையிலுள்ள ஆரா மொழிக் குன்றினருகே, திருவாங்கூர்ப் போலீஸ் சேவகராலே பிடிக்கட்டட்ட காசி நாடான் என்ற கீர்த்திபெற்ற கள்வனுடைய குணத்தையொத்தது. இவர்களுடைய மனமும், உள்ளமும், அந்தக் கா நாடானுடைய மனதையும் உள்ளத்தையும் ஒத்தன. இந்தக் காசி நாடானுடைய விருத்தாந்தம் “சொன்ன மெயில்’ பத்திரிகைக்கு அதன் திருநெல் வேலி அறிக்கையாளரால் தந்தி மூலமாக அனுப் பப்பட்டிருக்கிறது. சென்ற பல மாஸங்களாக நாங் கனேரி, சோனமாதேவி தாலுகாக்களில் பிரபல மான வழிப் பறிகளும், கொள்ளைகளும் நடத்தி வரும் ஜம்புலிங்க நாடான் என்பவனுடைய படைத்