பக்கம்:பாரதித் தமிழ்.pdf/475

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


476 பாரதி தமிழ்

தில் பழி கூறுவதை நாம் புறக்கணித்து, மதவாதி களுக்குள்ளே இவ் வழக்கத்தை மறுத் துரைப்போர் யாருமிருக்க நியாயமில்லை யாதலால் மதப் பற்றில் லாதவர்களே மேற்கூறிய கேள்வி கேட்டார்களென்று குறிப்பிட்டோம்.

ஆனல், மதப் பற்றுடையார், அஃதற்றாேர் என்னும் இரு திறத்தாரும் உணர்ந்துகொள்ளும்படி, இதுபோன்ற தீர்த்த யாத்திரைகளின் தத்துவத்தை இங்கு விளக்குவோம். இவற்றில் பாவமழிந்து புண்யத் தன்மை பெற வேண்டுமானல், உண்மை யான நம்பிக்கை யிருக்கவேண்டுமென்று நம்முடைய புராதன ஹிந்து சாஸ்த்ரங்கள் மிகத் தெளிவாக வற்புறுத்தி யிருக்கின்றன. உண்மையான மனக் கோளின்றி கங்கையில் முழுகினலும், மஹாமகத்தில் மூழ்கினலும் பாப கர்மந் தொலையாதென்று சாஸ்த் ரங்கள் தெளிவுபடத் தெரிவிக்கின்றன. இனிமேல் நாம் பாவம் பண்ணுவதில்லையென்ற மனே நிச்சயம் வேண்டும்.

தீர்த்த யாத்திரையின் அர்த்தமும் பயனும்

இந்தத் தீர்மானந்தான் பரிசுத்தத் தன்மை கொடுக்கிறது. ஒருவன் இந்த rண முதல் பாவம் செய்வதில்லையென்று மனவுறுதி செய்து கொள்ளுத லாகிய அக்நி மயமான செய்கையாலேயே அவன் அதுவரை செய்த பாவ்மெல்லாம் எரித்துவிடப் படுகிறது. “ஞானக்நிஸ் ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதேர்ஜுன” என்று பகவத் கீதையில் கடவுள் சொல்லியிருக்கிரு.ர். பாவத்தை இனிச் செய்ய வில்லையென்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் கிடையாது. சிலர் தவத்தால் ஞானமெய்த நாடுகிறார்கள். சிலர்