பக்கம்:பாரதித் தமிழ்.pdf/474

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மஹா மகம் 475

சம்பாதிக்கும் இந்தப் பாவங்களுக்கெல்லாம் விமோ சனம் அருள் புரிய வேண்டும்’ என்று ப்ரார்த்தனை செய்தனர். அவர்களிடம் கருணை பாலித்து எம் பெருமான், புண்ய தீர்த்தங்களே! பாவங்களாலே தீண்டப்படாத அமிர்த வாவிகள் இரண்டு நான் கும்பகோணத்தில் சமைத்திருக்கிறேன். அவற்றில் சென்று ஸ்நானம் புரிந்தால் உங்களுடைய பாவங்கள் விலகிவிடும்’ என்று கட்டளை புரிந்தார்.

பன்னிரண்டு வருஷங்களுக் கொருமுறை இங்கு கங்கை முதலிய தீர்த்த தேவதைகள் வந்து ஸ்நானம் புரியும் ஸ்மயமாகிய மஹாமக புண்ய காலம் நேற்று (பெப். 22) செவ்வாய்க் கிழமையன்று கும்பகோணத் தில் கொண்டாடப்பட்டது. லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் நேற்று அதில் ஸ்நானம் செய்திருப் t_f sI si jjøs] .

ஆனல், இத்தனை பேர்களும் ஸர்வ பாப ரஹிதர் களாய்ப் பரம சுத்தத் தன்மை யெய்தி விடுவார் களோ என்று சில மதப் பற்றில்லாதார் ஆகே: பிக்கலாம். தீர்த்த ஸ்தலங்கள், புண்ய rேத்ரங்கள், எல்லா மதஸ்தர்களுக்கும் பொதுவாக அமைந்திருக் கின்றன. யூதர்கள் யெருஸ்லேமைப் புண்ய rேத்ர மென்கிரு.ர்கள். கிருஸ்தவர்கள் யெருஸ்லேம், நஜ ரேத், ரோமாபுரி முதலிய பல பல புண்ய rேத்திரங் களைக் கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்கள் மக்கம், மதீனம், யெருஸ்லேம் முதலிய கணக்கற்ற rேத் ரங்களைக் கொண்டாடுகிறார்கள் பெளத்தர் கயை முதலிய ஆயிரக் கணக்கான புண்ய rேத்ரங்களைப் போற்றி வருகிறார்கள். எனவே, அறியாமை காரண மாகவோ, மறதி காரணமாகவோ சில கிறிஸ்தவப் பாதிரிகள் புண்ய rேத்ர யாத்திரை ஹிந்துக்களுக்கு மாத்திரம் விசேஷமாக ஏற்பட்ட வழக்கமென்று கருதுவார் போல், ஹிந்து மதத்தின்மீது இவ்விஷயத்