பக்கம்:பாரதித் தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு 49,

வேண்டுமென்று கடுமையான உத்தரவு செய்திருந்தார். ஹோட்டல்களிலிருந்து ஏதாவது வாங்கி உண்ணக் கூசுவாராம். “ஒயாமல் வியாதி பயம் கொண்டு உளைகின்ற நெஞ்சமே! தூ தூ! தூ! கோழை’ என்று அவர் தம்மைப்பற்றிச் சித்தக் கடலில் எழுதியிருக்கிரார்.

பாரதியாருக்குக் கோபம் அதிகமாம். அவருடைய மனைவியோ நண்பர்களோ எதிர்த்துப் பேச முடியாது என்று வ. ரா. குறிப்பிடுகிறார்.

கற்பனை உலகத்திலே சதா சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கவிஞரோடு வாழ்க்கை நடத்துவது எளிதான காரியமல்ல. அவர் எந்தச் சமயத்திலே எதை எதிர்பார்க்கிருரென்று மற்றவர்கள் காண்பது மிகவும் சிரமம். அதனால் கவிஞர் பெரிதும் ஏமாற்ற மடைவதும் கோபங் கொள்வதும் இயல்பு. மேலும் சிறிய நிகழ்ச்சிகளெல்லாம் அவர் உள்ளத்திலே பெரிய தோர் உணர்ச்சி வெள்ளத்தைத் தோற்றுவித்து விடும். அதன் குமுறலை அவறே சகிக்க முடியா தென்றால் மற்றவர்கள் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை. கவிஞரின் உள்ளம் மிக மிக நுட்பமானது. மற்றவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்றுபவை எல்லாம் அவருடைய நுண்ணிய உள்ளத்திலே ஆழ்ந்து பதிந்து அலைமோதும்; கொந்தளித்து மேலெழும்-அனல் வீசவும் தொடங்கும். அவற்றின் எதிரொலியை அவரைச் சூழ்ந்து நிற்போர் அநுபவித்துத்தான் ஆகவேண்டும். விஷயம் உணர்ந்தவர்கள் இதை ஒரு பாக்கியமாகக் கருதுவார்கள். மற்றவர்களுக்கோ பெரிய வேதனைதான். வ்வாறு கோபமும் படபடப்பும்கவிதைத் துடிப் பும் மிகுந்த கணவருடன் வாழ்வதிலே திருமதி செல்லம்மா பாரதி எத்தனையோ துன்பங்களைச் சகித்துக் கொள்ளவேண்டி யிருந்திருக்கும். அதிலும் குடும்பம்

பா. த.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/49&oldid=1539884" இலிருந்து மீள்விக்கப்பட்டது