பக்கம்:பாரதித் தமிழ்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 பாரதி தமிழ்

இன்பமும் ஆறுதலும் அளித்திருக்கவேண்டும். பாரதி யார் சிறந்த கவிஞராகப் பூரண மலர்ச்சி பெறவும், பூரீ அரவிந்தர் ஆத்மஞானியாகவும், பூரீ ஐயர் மிகச் சிறந்த ரஸிகராகவும் புதுச்சேரி உதவிற்று. மூன்று வேறு வேறு துறைகளிலே மூவரும் சிறப்பெய்தி ஞர்கள்: ஆனல் மூவரும் கவிதை உள்ளம் படைத் தவர்கள். தேசபக்தி, கடவுள் பக்தி முதலியவற்றில் ஆர்வமுடையவர்கள்.

அவர்களுடைய கூட்டுறவு அவரவருடைய தனித் தனி இலட்சியங்களையும் பக்தியையும் வலுவடையச் செய்திருக்க வேண்டும். மனத்தை வெல்லவும் சோம்பலை ஒழிக்கவும், தெய்வ நம்பிக்கையிலே செய லாற்றவும் பாரதியார் புதிது புதிதாகச் சங்கற்பம் செய்துகொள்ளுகிரு.ர்.

“இந்த மனமாகிய கடலை வென்றுவிடுவேன். பல நாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வ்ெல்ல நான் படும்பாடு தேவர் களுக்குத் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை. சோர்வு முதலிய ஸம்ஸ்காரங்கள் மிகுதிப்பட்டிருக் கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும்.

“புகையிலைச் சாற்றினல் தலை கிறுக்குகிறது. இருபது லக்ஷம் தரம் புகையிலையை நிறுத்தி விடுவ தாக ப்ரதிக்கினை செய்திருக்கிறேன். இதுவரை கைகூடவில்லை.................... ‘ (சிந்தக் கடல் 1915 HHA 12

நோயென்றால் பாரதியாருக்குப் பயம் அதிகம். நோய்க் கிருமிகள் அணுகக் கூடாதென்று நிரம்பவும் எச்சரிக்கை எடுத்துக்கொள்ளுவார். வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையுமுன்னே யாராயிருந்தாலும் காலை அலம்பிச் சுத்தம் செய்துகொண்டுதான் வர