பக்கம்:பாரதித் தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பாரதி தமிழ்


என்று அப்பாடலை முடிக்கிறார். அஹிம்சா நெறியினால் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்குமாயின் அந்த வழியைப் பின்பற்றி வையகம் வாழ வேண்டு மென்று அவர் உலகத்திற்கே இந்த வழியைச் சிபார்சு செய்கிறார்.

பாரதியாரின் கவிதைகளைத் தனித்தனியே ஆராய்வது இங்கே எனது நோக்கமல்ல. இந்நூலி னிடையே ஆங்காங்கு உரிய இடங்களில் சுருக்கமாக அதைச் செய்திருக்கிறேன். பொதுவாக அவருடைய கவிதை வளர்ச்சி, உரைநடை வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுவதே இங்கு எனது நோக்கம்.

முக்கியமான உலக மொழிகளிலே தேசியப் பாடல்களில்லாத மொழி ஒன்றும் இல்லையென்றே கூறலாம். மேல்நாட்டு மொழிகளிலுள்ள பல தேசியப் பாடல்கள் அந்நாட்டு மக்களுக்கு என்றும் உணர்ச்சியூட்டும் சக்தி வாய்ந்தவையாக அமைந் திருக்கின்றன. அவற்றாேடு சரிநிகராக வைத்துப் போற்றக்கூடிய தேசீயப் பாடல்களைப் பாரதியார் நமக்குத் தந்திருக்கிரு.ர். சிறந்த தேசீயப் பாடல்கள் தமிழில் இல்லை என்ற குறையை நீக்கிய தனிப் பெருமை அவருக்கே உரியது. அவர் பாடிய தேசீயப் பாடல்களில் சில அந்தக் காலத் தேவைக்காக உண்டானவையாக இருக்கலாம். அந்தத் தேவை மறைந்த பிறகு அவற்றின் முக்கியத்துவமும் மறைந்துவிடலாம். ஆ ன ல் நாட்டைப்பற்றி நினைக்கும்போது என்றும் உணர்ச்சிப் பெருக்கோடு பாடி அநுபவிக்கும் பாடல்கள் பல அவற்றிலே இருக் கின்றன. அவை மக்களின் உள்ளத்தை என்றும் கவர்ந்துகொண்டே யிருக்கும்.

புதுச்சேரிக்குச் சென்று அங்கும் விடாமுயற்சி யோடு தமது பத்திரிகைகளின் வாயிலாகத் தேசப் பற்றையும், சுதந்தர ஆர்வத்தையும் வளர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/68&oldid=1539772" இலிருந்து மீள்விக்கப்பட்டது