பக்கம்:பாரதித் தமிழ்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கல்வரவு கூறுதல் 99

இறைவன முந்தை இன் பொடு வாழ்க! வாழ்க நீ! வாழ்கநின் மனமெனு மினிய வேரிமென் மலர்வாழ் மேரி.நல் லன்னம். மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!

குறிப்பு.- 1901 முதல் 1911 வரை ஏழாம் எட்வர்டு சக்கர்வ்ர்த்தியாக இருந்தார். அவருக்குப் பின் ஜந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியாகப் பட்டம் சூடியவர் அவர் காலத் தில் வேல்ஸ் இளவரசராக இருந்தார். ஆவரை வரவேற்றே இப்பாடல் பாடப் பெற்றுள்ளது. இணையற்ற உணர்ச்சி நிக்க தேச பக்திப் பாடல்களைப் பாடித் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிய பாரதியார் வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு கூறிப் பாட்டியற்றியிருப்பது ஆச்சரியமாகவே தோன்றும். முழு மனத்தோடு இதைப் பாரதியார் இயற்றினரா என்பது சந்தேகந்தான். தாம் ஏற்றுக் கொண்டிருந்த வேலையினல் ஏற்பட்ட கடமையை நிறைவேற்றவே இதை அவர் செய் திருக்கலாம். என்றாலும் இப்பாடலிலும் பாரதியாரது தேச பக்தி ஒளிவிடுவதை நாம் காணலாம். ஆங்கிலேயரால் புதிய தொல்லைகள் பல நம் நாட்டிற்கு நேர்ந்துள்ளன என்பதைக் குறிப்பிட பாரதியார் தவறவில்லை. மேலும் இப்பாடல் “என் சேய்கள் வாழிய வாழிய’ என்ற மொழிகளோடு முடிவதையும் கவனிக்கவேண்டும்.