பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Հ ՍՍ பொருள் ஈட்டி வந்தார்கள். ஆனல் கடல் கடந்தா, ப்ராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்ற மூட. கொள்கை எப்படியோ இடைக்காலத்தில் புகுந்து விட்டது. நிறையப் பொருள் சம்பாதிக்கவேண்டும் என்பது பாரதியார் கொள்கை. கடல் கடந்தால் ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமென்ற மூடக்கொள்கையை மண்டையில் ஓங்கி அடிக்கிருர் பாரதியார். மண்டையில் ஓங்கி அடிப்பதுமில்லாமல் அதை குத்தும் வெட்டுமென்று சாடுகிருர் பாரதியார். 1917 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 21ஆம்தேதி வெளிவந்த பாரதியாரின் ப்ராயச்சித்தம் என்ற கட்டுரை இதை நன்கு விளக்குகிறது. இந்தச் சுவை யான கட்டுரையையும் பார்ப்போம். என்னுடைய ஸ்நேஹிதர்களில் ஒருவராகிய ராமராயர் இங்கிலாந்துக்குப் போயிருந்தார். திரும்பி வேதபுரத்துக்கு வந்தார். அவருக்கு ஒருவிதமான வேதாந்தப் பயித்தியம், ப்ரம்மமே ஸ்த்தியம். லோகமெல்லாம் மித்தை. ஆதலால் எல்லாரும் ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ள வேண்டும். தலையை மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் சடைகளாகத் திரித்து விடலாம். அப்படிச் செய்தாலும் குற்றமில்லை. எப்போதும் ஒம், ஓம்’ என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது ஐம்புலன்களையும், மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற நான்கு அந்தச் கர்ணங்களையும் உள்ளே இழுத்துக்கொண்டு சுத்த ப்ரம்ம நிலையோ, அல்லது அதற்குப் போகிற பாதையோ ஆகிய நிர்விகற்ப ஸ்மாதியில் நிற்கவேண்டும். இது அவருடைய மதம்; ஆனால் அவருடைய நடை மற்ற மனுஷயர்களைப் போலேதான். ஸந்யாஸம் வாங்கவில்லை; தலை மொட்டையுமில்லை; சடையுமில்லை; ஓங்காரத்தைத் தவிர வேறு வார்த்தை