பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


103 மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் மாப்பிள்ளையுடன் எவ்விதமான சம்பந்தமுமில்லாமல் கத்திரித்துவிட்டார். இவருடைய மனைவி மூலமாகக் காயிதப் போக்குவரவு நடக்கிறது. அதில்கூட இவர் கவனம் செலுத்துவதில்லை. இதே காரணத்தை யனுசரித்து, அதாவது, அவருடைய மாப்பிள்ளை ரங்கூனுக்குப் போனதை உத்தேசித்து, இந்த சாஸ்திரிகள் தம்முடைய வைதிகத்தை மிகவும் விஸ்தாரப் படுத்தி வைத்திருக்கிருர், மற்றவர்களுடைய வைதிகம் ஆறுமுழமென்று வைத்துக்கொண்டால் இவருடைய வைதிகம் பன்னிரண்டு முழம். இந்த ப்ராமணர் இங்கே வைதிகர்களுக்குத் தலைவர். இவரிடம் நான் போய் ராமராயருக்குப் பிராயச்சித்தம் செய்து வைக்க வேண்டு மென்று சொன்னேன். அப்போது மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் என்னைப் பார்த்து, "நீர் இந்த விஷயத்தை ஏன் கவனிக்கிறீர்?" என்று கேட்டார். நான் வைதிகமென்றும் அவர் நினைத்துக் கொண்டிருக்கிருர். அவர் கேள்விக்கு நான் மறுமொழி சொல்லாமல், ஸமுத்ர யாத்திரை செய்தவன் பண்ண வேண்டிய ப்ராயச்சித்த மெப்படி?” என்று கேட்டேன்; இது வரைக்கும் சொன்ன கதை யெல்லாம் பீடிகை. இனி மேல் எழுதப்போகிற வசனங்களே நான் சொல்லவந்த விஷயம். ப்ராயச்சித்தம் கடல் யாத்திரைக்கு எப்படி நடத்த வேண்டுமென்று நான் கேட்டதற்கு, ரங்கநாத சாஸ்திரி சொல்லிய மறுமொழி கொஞ்சம் தர்க்க சாஸ்த்ர இமானியாக இருந்தபோதிலும் எனக்கே கேட்க ரஸமாக இருந்தபடியால், பிறருக்கும் தெரிவிப்போம் என்ற விண்ணத்துடன் இங்கெழுதலானேன்.) ரங்கநாத சாஸ்திரி ள்ே சொல்லுகிருர் : - "இங்கிலீஷ் படித்தவன் பண்ணுகிற ப்ராயச்சித்த மல்லாம் ஹம்பக் (பொய் வேஷம்) ப்ராயச்சித்தம்,