32
யில்லை. எனக்கு ஸாதாரணமாகவே உழைப்பு அதிகமாதலால், அத்துடன் சோறும் விழுங்க முடியாமற் போகவே, சோர்வும் முகக் கடுகடுப்பும் அதிகப்பட்டன. இத்யாதி, இத்யாதி.
நாள் தவறினாலும், இந்தக் கணக்குத் தவறுவதில்லை, சீச்சி! இந்த மண்ணுலகம் ஓரிடமா? இதில் மனிதன் வசிக்கலாமா? ஆமைகளும் ஓநாய்களும் வாழலாம். இது துன்புக் களம். இது சிறுமைக் களஞ்சியம். இது நரகம். இதில் வெறுப்படையாத மனிதர்களின் முகத்திலேகூட விழிக்கலாகாது.
வீட்டு வியாபாரங்களையும் எனது சொந்த வர்த்தமானங்களையும் குறித்துச் சில திருஷ்டாந்தங்கள் காண்பித்தேன். இனி, வெளி வியாபாரங்கள். எனது மித்திரர், அயலார் முதலியவர்களின் செய்திகள் ஸம்பந்தமாகச் சில திருஷ்டாந்தங்கள் காண்பிக்கிறேன். திருவல்லிக்கேணியிலே 'செ...... ஸங்கம்' என்பதாக ஓர் தேசபக்தர் ஸபை உண்டு. அதில் தேசபக்தர்கள் தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, 'காரியங்கள்' – ஒரு காரியமும் நடக்கவில்லை - நடத்தினோம். நாங்கள் தேச பக்தர்கள் இல்லையென்று, அந்தச்சபை ஒன்றுமில்லாமல் போனதிலிருந்தே நன்கு விளங்கும்.
நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; காலணாவின் அடியார்க்கும் அடியார்.
ஆனால், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதை கேட்டால் கைகால் நடுங்கும்படியாக இருக்கும். பணத்தொண்டரடிப் பொடியாழ்வார் எங்களெல்லோரைக்