பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 என்பதே அந்த நிபந்தனை. பாரதியாரோ பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக மறைமுகத் தாக்குதல்களில் ஈடுபடுகின்ருர். உலக அரசியல் நடவடிக்கைகளைப்பற்றி எழுதினால் அது குற்றமாகாது. ஆகவே அந்த வகையிலும் பாரதியார் எழுத முனைகின்ருர். எப்டியாவது அந்நிய அரசாங்கத்தின்மேல் வெறுப்புண்டாக்கி சுயராஜ்யம் பெறுவதே தமது முக்கிய குறிக்கோளாகக் கடைசி வரையிலும் கொண்டிருக்கிருர் என்பது கவனிக்கத் தகுந்தது. அதற்கு இது நல்ல எடுத்துக் காட்டாகும். வெனிஜிலாஸின் கதி நேசக் ககதியாருக்குச் சார்பாக நின்று. யுத்த காலத்தில் கான்ஸ்டன்டைன் ராஜாவை யவன (கிரேக்க) லிம்ஹாஸ்னத்தினின்றும் தள்ளி, அதனால் உள்நாட்டில் தோன்றிய கிளர்ச்சியை வெளியுதவியால் நசுக்கித் தம்மைத் தாமே கிரேக்கரின் ஸ்வேச்சாதிபதியாகச் சமைத்துக்கொண்ட மந்திரி வெனிஜிசாஸ்-க்குக் காலம் சரியான கூலி கொடுத்து விட்டது. கிரேக்க ராஜதானி யாகிய அத்தேனியா (ஏதென்ஸ்) நகரத்திலிருந்து, நவம்பர் 18 ஆம் தேதி புறப்பட்ட தந்தியொன்றில், இவர் அந்நாட்டினின்றும், ப்ரிடிஷ் போர்க் கப்பல்களின் பாது காப்பில் வெளியேறிச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது. நேசக் கட்சியார் ஆட்டியபடியெல்லாம் ஆடும் பொம்மையாகத் தான் இருந்து கொண்டு, அவர்களுடைய பட்டாள உதவியால் தன் இஷ்டப்படி யெல்லாம் யவன தேசத்தை ஒரு பொம்மைபோல் ஆட்டிக்கொண்டு வந்த வெனிஜிலாஸ் இப்போது, ஸ்மீபத்தில் நடந்த எலக்ஷனில் தோல்வியடைந்ததுமன்றி, எந்த ராஜாவை வீழ்த்து வதில் இந்த மஹான் (!) அன்ய ராஜாங்கத்தாருக்கு உதவி