பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Ö3 வந் : ஏப்ரல் மாதம் 22.ந் தேதி ஒரு வால் தகத்திரம் எரி நக்ஷத்திரம் ஒன்றைத் தன் வாலில் அவ்விக் கொண்டு வந்து பூமியின் மேல் மோதப் போவதாகவும், அதனுல் இந்தப் பூமண்டலம் துாள் துாளாக நொறுங்கிவிடப் போவதாகவும் சொல்லுகிருர்களே? அது வாஸ்தவமாக இருக்குமா? காளி : பொய்க் கதை. ஸ்ந் : உமக்கெப்படித் தெரியும்? அமெரிக்கா தேசத்தில் யாரோ ஒரு பெரிய வான சாஸ்திரப் பண்டிதர் சொல்லியிருக்கிருராமே? அது பொய்யென்று நீர் எப்படிக் அண்டீர்? காளி : பொய்க் கதைதான் எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நீர் என்னிடம் வந்து சேரும். அப்போது காரணங்கள் சொல்லுகிறேன். ஸந் : பூமி தூளாய்ப்போன பிறகு நான் உம்மிடம் வந்து கேட்பதெப்படி? நீர் விடை சொல்வதெப்படி? காளி : இந்தப் பூமியில் இன்னும் நாமே நெடுநாளி லிருந்து பலவித நியாயங்கள் நடந்து நிறைவேறுவதைப் பார்க்கப் போகிருேம். பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது. மனித ஜாதி முழுமைக்கும் விடுதலை யுண்டாகப் போகிறது. நீர் சொல்லிய ருஷிய ராஜ்யப் புரட்சியானது இனி வரப்போகிற ந ற் கா லத் தி ன் முன்னடையாளங்களில் ஒ ன் று. பூமி தூளாகாது; மனிதர் ஒருவருக்கொருவர் செய்யும் அநீதி தூளாகும். ஸ்ந் : சரி, சரி; உம்முடைய ஞான மூட்டையை நம்மிடம் அவிழ்க்கத் தொடங்கிவிட்டீர்...... எனக்குக் காபி சாப்பிட நேரமாகிறது. நான் போய்வருகிறேன் இவ்வாறு சொல்லி ஸ்ந்தோஷராயர் எழுந்து போய்விட்டார் ஸ்ந்தோஷராயர் வெளிக்கு எப்படிப்