பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 வாங்கி சற்றே விடாய் தீர்த்துக்கொண்டாள். 'என்ன? ராமராயரே, மோட்டைப் பார்க்கி lரே? மோட்டில் என்ன எழுதியிருக்கிறது? ப்ரம்மம் ஸத்யம் லோகம் மித்யை. ஆதலால், வித்வான்கள் எப்பொழுதும் பொய் சொல்லிக் கொண்டே இருப்பதே மேன்மை என்றெழுதியிருக் கிறதா?’ என்று கேட்டாள். ராமராயருக்கு முகம் சிவந்து போய்விட்டது. கொஞ்சம் மீசையைத் திருகி விட்டுக்கொண்டார். தாடியை இரண்டு தரம் இழுத்தார். கடகடவென்று சிரிக்கத் தொடங்கினர். பூரீமதி ஆனி பெஸண்ட் ராஜ்ய விஷயத்திலே தலை பிட்டு சுதேசியமே தாரகமென்றும், வந்தேமாதரம் ஒன்றே ஜீவமந்திரம் என்றும் பேசத்தலைப்பட்டது. மேற்படி ராம ராயருக்குச் சம்மதமில்லை. வேதாந்திகள் எப்போதும் பரப்ரஹ்மத்தையே கவனிக்க வேண்டும். லெளகிக விஷயங்களைத் துளிகூடக் கவனிக்கக் கூடாதென்பது அவருடைய மதம். வேதவல்லி அம்மை ராமராயரை நோக்கிச் சொல்லு கிருர்:- "எடுத்ததற்கெல்லாம் ஆனி பெஸண்ட் சொன் னதே பிரமாணம் என்று தொண்டை வறண்டு போகக் கத்திக்கொண்டிருந்தீர். இப்போது அந்த அம்மாள் க்யராஜ்யம் நல்லதென்று சொல்லும்போது அவளைப் புறக் கணிக்கிறீர்! ஐயோ! கஷ்டம் புருஷஜன்மம் ஸ்திரீகளுக் குள்ள திறமையிலே நாலிலொரு பங்கு புருஷர்களுக்கில்லை. எல்லா தேசங்களிலும் புருஷரைக் காட்டிலும் ஸ்திரிகளுக்கு ஆயுள் அதிகம். அதனல் சரீர உறுதி அதிகம் என்று ருஜக பிாக்கியாயிற்று; புத்தி அதிகமென்பதுந்தான். ராமா 'னத்தில் சீதை பொய் மான மெய்மான் என்று நினைத்து 'ாற்றம் அடைந்தாள் என்றும், எங்கள் வீட்டில் ஒரு