276
பாரதியார் கதைகள்
விலகிற்று ஒருத்தன் ‘ஹோ!’ என்று கத்திக் கொண்டோடிப் போனான். அத்தனை கூட்டமும் ‘ஹோ, ஹோ, ஹோ‘ என்று கத்திக் கொண்டு ஓடிப் போயிற்று இவன் படபடவென்று குட்டிக்கரணம் போட்டுக் கொண்டே கத்திச் சண்டை வஸ்தாதுகளின் மேலே போய் விழுந்தான் அவர்கள் ஹோ என்று கதறி ஒருவர் வாள் ஒருவர் மீது பாய இரத்தம் பீறிட்டுக் கீழே சாய்ந்தனர். இதையெல்லாம் ஏழாம் உப்பரிகையின் மேலேயிருந்த பார்த்துக் கொண்டிருந்த பாத்ஷா “ஹோ, ஹோ, இவனையன்றோ நமது சானாபதியாக நியமிக்க வேண்டும்.” என்று கருதி அவனை அழைத்து, “நீ நமது சேனாபதி வேலையை ஏற்றுக் கொள் என்றான்.” இவன் அந்த வார்த்தையைக் கேட்டவுடன் சேனையென்ற ஞாபகமும், சண்டையென்ற நினைவும், அதிலிருந்து மரணமென்ற ஞாபகமும் மனதில் தோன்ற உடனே பயந்து நடுங்கிப் போய் முப்பது குட்டிக்கரணம் போட்டுப் பாத்ஷாவின் மேலே போய் விழுந்தான்.
‘ஓஹோ! இவன் தனது வணக்கத்தையும் பராக்ரமத்தையும் நம்மிடத்தில் நேரே காண்பித்தான்” என்று பாத்ஷா சந்தோஷத்துடன் வியந்து அவனுக்கு லக்ஷம் மோஹரா விலையுள்ள ஒரு வயிர மாலையை ஸம்மானம் கொடுத்து, சேனாபதி நியமன உத்தரவும் கொடுத்தனுப்பினார்.
அந்த பாத்ஷாவின் காலத்தில் எங்கும் சண்டையே கிடையாதாகையால், அந்தரடிச்சான் ஸாஹப் போரில் தனது திறமையைக் காட்ட சந்தர்ப்பமே வாய்க்காமல் சாகுமளவும், சேனாபதி என்ற நிலைமையில் சௌக்கியமாக நாளொன்றுக்கு லக்ஷம் குட்டிக் கரணங்கள் போட்டுக் கொண்டு, இதனாலேயே எட்டுத் திசைகளிலும் கீர்த்தியோங்க மிகவும் மேன்மையுடன் வாழ்ந்திருந்தான்.
கிளிக் கதை
எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய்ப்பழச்சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன்